கொல்கத்தாவில் 47 வயது பெண் ஒருவர், தனது 22 வயது மகனுடன் கைகோர்த்து செல்வந்தர் ஒருவரை திட்டமிட்டு ஏமாற்றிய அதிர்ச்சி தரும் “ஹனி ட்ராப்” (Honey Trap) சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்த மாலதி சர்க்கார் என்ற அந்தப் பெண், தனது இளமைத் தோற்றத்தை மூலதனமாக வைத்து இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார்.
மாலதியின் மகன் அர்ஜுன், தனது ஜிம் நண்பரான ராகேஷ் மேத்தா மூலம் விக்ரம் ராய் என்ற பணக்கார வியாபாரியை தாய்க்கு அறிமுகப்படுத்தியுள்ளார். 47 வயதானாலும் இளமையாக தோற்றமளித்த மாலதியின் பேச்சில் மயங்கிய விக்ரம் ராய், அவரை தீவிரமாக காதலிக்க தொடங்கியுள்ளார். இதனைச் சாதகமாக்கி கொண்ட மாலதி, “உன்னையே என் வாழ்க்கையாக கருதுகிறேன்” என ஆசை வார்த்தைகளைக் கூறி, விக்ரமை தனது மாயவலையில் வீழ்த்தியுள்ளார். மகனின் படிப்பு மற்றும் குடும்பச் சூழலை காரணம் காட்டி, விக்ரமிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ளார்.
மாலதியின் தொடர் பண ஆசையாலும், அவரது நடவடிக்கைகளாலும் சந்தேகமடைந்த விக்ரம் ராய், ரகசியமாக விசாரித்தபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். மாலதி, அவரது மகன் அர்ஜுன் மற்றும் நண்பர் ராகேஷ் ஆகிய மூவரும் இணைந்து, திட்டமிட்டு தன்னை சிக்க வைத்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். சுமார் 35 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர, தங்க நகைகளை அந்த கும்பல் அபகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட வியாபாரியின் புகாரை தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த கொல்கத்தா போலீசார், மாலதி உள்ளிட்ட 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். “காதல் என்பது இவர்களுக்கு ஒரு வருமானம் தரும் தொழிலாகவே இருந்துள்ளது” என போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். வயது வித்தியாசமின்றி, வசதியானவர்களைக் குறிவைத்துத் தாய் – மகனே இணைந்து நடத்திய இந்த நூதன மோசடி கொல்கத்தா நகரை உலுக்கியுள்ளது.
Read More : “சொத்து வாங்குபவர்களுக்கு புதிய சலுகை”..!! அடியோடு மாறும் ரியல் எஸ்டேட் விதிமுறைகள்..!! எப்போது அமல்..?



