டேய் சீக்கிரம் வாடா..!! ஆசையோடு காதலி வீட்டுக்கு போன காதலன்..!! பாலில் மயக்க மருந்து..!! தனியாக வந்த அந்தரங்க உறுப்பு..!! பயங்கரம்..!!

Sex 2025 1

டெல்லியில் காதலிப்பதாக கூறி திருமணத்தை மறைத்த மருத்துவருக்கு, அவரது காதலியே விபரீத தண்டனை அளித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.


டெல்லியை சேர்ந்த அமீனா என்ற இளம்பெண், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விசர்ஜீத் என்ற மருத்துவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால், விசர்ஜீத் தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட ரகசியத்தை மறைத்து, அமீனாவுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. காலப்போக்கில் இந்தத் துரோகத்தை அமீனா கண்டறிந்தபோது, ஏமாற்றப்பட்ட ஆத்திரத்தில் தனது காதலனைப் பழிவாங்கத் துடித்துள்ளார். இதற்காக திட்டமிட்டு விசர்ஜீத்தை தனது இல்லத்திற்கு வரவழைத்துள்ளார்.

வீட்டிற்கு வந்த விசர்ஜீத்திற்கு, இரவு நேரத்தில் அவர் பருகிய பாலில் அமீனா மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார். அந்த மருந்து வேலை செய்ய தொடங்கியதும், விசர்ஜீத் ஆழ்ந்த உறக்கத்திலும் அரைமயக்க நிலையை எட்டியுள்ளார். நள்ளிரவு சுமார் 2.30 மணியளவில், விசர்ஜீத் முற்றிலும் நிலைகுலைந்து இருப்பதைப் பயன்படுத்திக் கொண்ட அமீனா, கூர்மையான கத்தியால் அவரது அந்தரங்க உறுப்பை துண்டித்துள்ளார்.

வலியால் அலறிய விசர்ஜீத், ரத்த வெள்ளத்தில் உயிருக்குத் துடித்த நிலையில், தானாகவே அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபரீத சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீஸார், அமீனாவிடம் நடத்திய விசாரணையில் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. “திருமணத்தை மறைத்துக் காதலித்து என்னைப் ஏமாற்றியதால் தான் இப்படிச் செய்தேன்” என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இருப்பினும், அமீனா மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Read More : வங்கிக் கணக்கில் ரூ.2,000..!! இதை செய்தால் உங்களுக்கும் பணம் வரும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

CHELLA

Next Post

முன்னாள் காதலியின் அந்தரங்க உறுப்பில் கட்டுக்கட்டாக பணம்..!! கொடூரமாக சித்ரவதை செய்த காதலன்..!! காட்டுக்குள் நடந்த பயங்கரம்..!!

Mon Mar 2 , 2026
சத்தீஸ்கர் மாநிலத்தின் வனப்பகுதியில் ரேகா சிங் என்பவரின் கொலை வழக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு வறுமையைக் காரணம் காட்டித் தவிர்க்கப்பட்ட ஒரு காதல், இன்று ஒரு தாயின் உயிரைப் பறித்துள்ளது. வனப்பகுதியில் ரேகா சிங்கின் சடலம் கண்டெடுக்கப்பட்டபோது, அந்த இடமே ஒரு பயங்கரமாக இருந்தது. உடல் முழுவதும் சித்திரவதைக்கான தழும்புகள் நிறைந்திருந்த நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை ஒரு அதிர்ச்சிகரமான உண்மையைப் போட்டுடைத்தது. ரேகா உயிருடன் இருக்கும்போதே, […]
Rape 2025

You May Like