தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் மும்முமரமாக பணியாற்றி வருகின்றன.
அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன்படி இன்று திமுக உடன் விசிக பேச்சுவார்த்தை நடத்தியது.. முதல்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது “ திமுக குழுவினரோடு விசிக சார்பில் நானும், கட்சியின் பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன், ரவிகுமார் ஆகிய மூவரும் பங்குபெற்றோம்.. 2026 சட்டமன்ற தேர்தல், வழக்கமான தேர்தல் அல்ல, இந்த தேர்தலில் வலதுசாரி சக்திகளை காலூன்ற விடாமல் தடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை 100% உறுதிப்படுத்த வேண்டும் என்ற அக்கறையோடு இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு அங்கம் என்ற உரிமை உணர்வோடு எங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டோம்..
நாங்கள் திமுகவோடு பேரம் கட்சியாக இல்லை.. திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.. அது தமிழ்நாட்டிற்கான வெற்றி, சமூக நீதிக்கான வெற்றி என்ற அந்த புரிதலோடு எங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டோம்.. திமுக தரப்பில் எங்கள் கருத்துகளை கேட்டுக் கொண்டார்கள்.. தலைவரோடு கலந்து பேசி மீண்டும் அழைப்பு விடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள்.. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்துள்ளது..
தமிழ்நாட்டை பொறுத்தவரை மோடி வித்தை எடுபடாது.. எத்தனை முறை வந்தாலும், திமுக அரசு மீது களங்கம் பூச முயற்சித்தாலும் அது தமிழ்நாட்டில் எடுபடாது.. 2026 தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவினருக்கு மீண்டும் அதை உணர்த்துவார்கள்.. தமிழ்நாட்டில் மதவாத அரசியலுக்கு, ஜாதிப்பேசும் அரசியலுக்கு இடமில்லை.. விசிகவுக்கும் தமிழ்நாட்டின் இந்த சுமூகமான அரசியல் சூழலை பாதித்துவிடக் கூடாது என்ற பொறுப்புணர்வு இருக்கிறது..
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை முன்வைத்தது விசிக தான்.. அந்த நிலைப்பாட்டில் இன்னும் உறுதியாக இருக்கிறோம்.. ஆனால் அதற்கான அரசியல் சூழல் தமிழ்நாட்டில் இன்னும் கனியவில்லை. எனவே அந்த கோரிக்கையை இன்று நாங்கள் வைக்கவில்லை..” என்று தெரிவித்தார்..
Read More : BREAKING | அவசர அவசரமாக டெல்லி கிளம்பும் எடப்பாடி பழனிசாமி..!! பாஜக மேலிடத்தில் முறையிட முடிவு..?



