போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது. ஜனவரி மாதம் நடைபெற்ற இவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம், பேச்சுவார்த்தைக்காக கைவிடப்பட்டது.
இந்நிலையில், வரும் பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாவிட்டால், மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.