விழுப்புரம் மாவட்ட அரசியலில் நீண்டகாலமாக நிலவி வந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஓ.பன்னீர்செல்வம் அணியின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவரான முன்னாள் எம்.பி செஞ்சி வெ.ஏழுமலை அதிரடி முடிவை எடுத்துள்ளார். ஓ.பி.எஸ் அணியிலிருந்து விலகிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்ற செஞ்சி ஏழுமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மலர்க்கொத்து வழங்கி மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந்தார். ஓ.பி.எஸ்-ன் ‘அதிமுக உரிமை மீட்புக் குழுவின்’ விழுப்புரம் மாவட்டச் செயலாளராகச் செல்வாக்குடன் திகழ்ந்த ஏழுமலையின் இந்தத் திடீர் முடிவு, மாவட்டத்தில் உள்ள ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : முடிவுக்கு வரும் இழுபறி..! இத்தனை சீட் தான்..! ஸ்டாலின் கறார்..! இன்று முடிவை அறிவிக்கிறது காங்கிரஸ்..!



