தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது.. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது பேசிய விஜய் “ நான் வேலூரில் பேசும் போது தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு என்று சொல்லி இருந்தேன்.. தமிழ்நாட்டு மக்களின் ஒரே பிரதிநிதியா உண்மையாக பிரதிநிதியாக நான் மட்டும் தான் இருக்கிறேன் என்பதற்காக அதை தான் சொல்லி இருந்தேன்.. ஆனால் நான் பேசுவதை திரித்து கூறி அவதூறு பரப்புகின்றனர்..
சென்னையில் டெல்லி டெல்லி என்று கூவுவதும், ரெய்டு வந்துவிட்டால் டெல்லிக்கு வெள்ளை குடை பிடிப்பது யார் என்று உங்களுக்கே தெரியும்.. தமிழ்நாட்டை காப்பாற்றுவது திமுக தான்.. ஸ்டாலின் சார் என்று சொல்வதெல்லாம். ஒர்க் அவுட்டே ஆகாது.. ஓம் சக்தி, பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி என்று சின்ன பசங்க எல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டனர்..
தமிழ்நாட்டு அணி டெல்லி அணி என்று சொல்கின்றனர்.. கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணியால் தொட்டுக் கூட பார்க்க முடியாது.. கிரிக்கெட்டில் விசிலை போடுவது சி.எஸ்.கே, வரப் போகும் தேர்தலில் விசிலை போடப் போவது தவெக தான்.. தமிழ்நாடு தான் தவெக, தவெக தான் தமிழ்நாடு.. இந்த அணி, அந்த அணி, டெல்லி அணி எல்லாவற்றையும் தவெக அடித்து நொறுக்கும்.. எனக்கும் எனது மக்களுக்கும் நடுவில் யாராலயும் நடுவில் நுழைய முடியாது..
இது அம்மா பையன் உறவு, அக்கா தம்பி உறவு, அண்ணன் தங்கை உறவு.. இது ஆழமான உறவு.. மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது எலக்ஷன், எனக்கும் என்னை நேசிக்கும் மக்களுக்கும் இது எமோஷன்.. இது சாதாரண எமோஷன். இது பவர்ஃபுல் ஓசியானிக் எமோஷன்.. இப்படி இருக்கும் போது வீட்டுக்கு வீடு என்பது 100% இந்த தேர்தலில் நிரூபணமாகும்..” என்று தெரிவித்தார்..
Read More : “ இன்று மனைவி பற்றி எமோஷ்னலாக பேசி விஜய் அழுவாரு..” தஞ்சை Script இது தானாம்.. லீக் ஆன PR டீம் ஆடியோ..!



