தவெக ஆட்சிக்கு வந்தால் பயிர் கடன் ரத்து.. விஜய் அளித்த வாக்குறுதிகள் என்னென்ன..?

tvk vijay 3

தஞ்சையில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் திமுக அரசை கடுமையாக சாடினார்.. திமுக தீயசக்தி என்றும், தவெக தூய சக்தி என்று, அடுத்தது தவெக ஆட்சி தான் அமையும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.. மேலும் தவெக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றும் விஜய் பேசினார்..


அப்போது “ நமது தவெக ஆட்சி அமைந்ததும் உரத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.

5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுவற வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் ரத்து செய்வதற்கும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் கடனை 50% வரை ரத்து செய்ய சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம்..

2 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகள், மற்றும் நிலமற்றவர்கள் குடும்பத்தில் யாரும் மாநில, மத்திய அரசு ஊழியராக இருக்கும் பட்சத்தில் அவர்களின் குழந்தைகள் கல்வி செலவையும் அரசே ஏற்கும்..

விவசாயத்திற்கும் எதிரான எந்த திட்டமாக இருந்தாலும், மத்திய அரசின் நெருக்கடி இருந்தாலும் அந்த திட்டத்தை தவெக ஆட்சி நிராகரிக்கும். விவசாயிகள் பக்கமே தவெக ஆட்சி இருக்கும்.

கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல் மூட்டைகள் பாதுகாக்கப்படும். போதுமான கொள்முதல் நிலைய வசதிகள் ஏற்படுத்தப்படும்.

கொள்முதல் நிலையங்களில் ஒரு பைசா கூட கமிஷன் வாங்காமல் பார்த்துக் கொள்ளப்படும்.

500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை நிர்ணயிக்கப்படும். ரேஷன் கடைகளில் அரிசி தவிர அனைத்து பொருட்களும் பாக்கெட் செய்து விற்பனை செய்யப்படும்.

மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உண்மையாக, உணர்வுப்பூர்வமாக தவெக அரசு குரல் கொடுக்கும்.

கல்வி, மருத்துவம், ரேஷன், குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளுக்கு தான் நமது அரசு முன்னுரிமை கொடுக்கும்.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

கோடிகளில் ஒப்பந்தம் என்று விளம்பரம் செய்யாமல், உண்மையான ஒப்பந்தம் போட்டு செயல்படுத்தினாலே எல்லாம் தானாக நடக்கும்.

நாங்கள் ஊழல் செய்யாதவர்கள் என்றும், ஊழல் செய்யமாட்டோம் எனவும் நெஞ்சை தொட்டு சொல்ல முடியுமா?

ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன், ஊழல், லஞ்சம் இல்லாத என்று நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம். இதை செய்தாலே எல்லாம் தன்னாலே நடக்கும்..

எங்கள் ஓட்டு எங்கள் உரிமை.. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது.. எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான்.. நாங்கள் யாரையும் நம்பி ஏமாற மாட்டோம்.. எங்கள் வார்த்தையில் இருந்து மாறமாட்டோம்.. இது நிஜம்..” என்று வாக்குறுதி சொல்லும் படி விஜய் கோரினார்.. உங்களோடு நான் இருக்கேன், நம்மோடு மக்கள் இருக்கின்றனர்.. நம்பிக்கையாக இருங்கள். வெற்றி நிச்சயம்..நல்லதே நடக்கும்..” என்று தெரிவித்தார்.

Read More : “மோசடி ஆட்சிகளிலேயே முக்கியமான ஆட்சி இந்த திமுக ஆட்சி.. தீய சக்தி ஆட்சி மறையட்டும்..” விஜய் ஆவேசம்..!

RUPA

Next Post

தேநீர் பிரியர்களுக்கு எச்சரிக்கை.. இந்த சீசனிலும் நீங்கள் அதிகமாக குடித்தால்.. அவ்வளவு தான்..!

Wed Mar 4 , 2026
பலர் ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு முறை தேநீர் அருந்துகிறார்கள். குறிப்பாக கார்ப்பரேட் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் நிறைய தேநீர் அருந்துகிறார்கள். உண்மையில், கோடையில் அதிகமாக தேநீர் அருந்துவது நல்லதல்ல என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். கோடையில் அதிகமாக தேநீர் அருந்துவது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதிகமாக தேநீர் அருந்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்… குறிப்பாக கோடையில், தேநீர் அருந்துவதால் நீரிழப்பு போன்ற […]
tea 2026

You May Like