அடுத்த பயங்கரம்.. ஊருக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் அரிவாளால் வெட்டிய கும்பல்..! பதற வைக்கும் வீடியோ..!

manamadurai attack

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வடமாநில தொழிலாளி உட்பட 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. 5 பேர் மீது 6 பேர் கும்பல் பெட்ரோல் குண்டை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துள்ளனர்.. இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதனை விசாரிக்க சென்ற காவல்துறை வாகனம் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.. இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


நெல்லை நாங்குநேரி சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் தற்போது சிவகங்கை மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிரமத்தில் கொலை வெறி தாக்குதல் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. பட்டியலின மக்கள் வசிக்கும் கிராமத்திற்குள் புகுந்து கொடூரமாக தாக்குதல் நடத்தி உள்ளனர்..

மானாமதுரையை அருகே இடைக்காட்டூர் பகுதியை சேர்ந்த ராஜு என்பவரிடம் மதுபோதையில் இருந்த ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளது.. மேலும் அவர்கள் அவரை அரிவாளால் தாக்கி உள்ளனர்.. இதையடுத்து ராஜு அவர்களிடம் இருந்து தப்பி தனது வீட்டிற்கு வந்துள்ளார்.. ஆனால் விடாமல் 3 பைக்குகளில் துரத்தி வந்த  9 பேர் கொண்ட கும்பல், பார்ப்பவர்களை எல்லாம் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.. இந்த தாக்குதலில் தெருவில் நின்றிருந்த தினேஷ், ராஜேந்திரன், சுப்பிரமணியம் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.. இதுபோன்ற சம்பவம் தங்கள் பகுதிகளில் தொடர்ந்து நடந்து வருவதாகவும் காவல்துறை இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Read More : Flash : குட்நியூஸ்..! தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்றும் அதிரடி குறைவு.. நகை வாங்க சரியான நேரம்..!

RUPA

Next Post

விஜய் தனது மனைவி சங்கீதாவுக்கு ரூ.250 கோடி கொடுக்கிறாரா..? திரையுலகில் இதுதான் ஹாட் டாபிக்..!

Thu Mar 5 , 2026
விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரிய விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதா தனது 27 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.. கோலிவுட்டில் முன்னணி நடிகராக லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்று சமீபத்தில் அரசியலில் நுழைந்த விஜய் குறித்து அவரது மனைவி சங்கீதா எடுத்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சமீபத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி குடும்ப நீதிமன்றத்தை அணுகியது அனைவருக்கும் […]
sangeetha vijay 1

You May Like