அதிமுகவில் மீண்டும் இணைந்த வெல்லமண்டி நடராஜனுக்கு புதிய பொறுப்பு.. இபிஎஸ் அறிவிப்பு..!

eps vellamandi natarajan

2016-2021 காலக்கட்டத்தில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அமைச்சராக பணியாற்றியவர் வெல்லமண்டி நடராஜன். கடந்த 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பணியாற்றி வரும் அவர், திருச்சி மாநகர மாவட்ட அவை தலைவராகவும் இருந்துள்ளார்.. 2022-ல் நிலவிய உட்கட்சி மோதலில் ஓபிஎஸ் பக்கம் நின்றதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.. தொடர்ந்து ஓபிஎஸ் அணியில் வெல்லமண்டி நடராஜன் இருந்து வந்தார்.


ஆனால் அரசியலில் தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ் சமீபத்தில் திமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் திமுகவில் இணைவதற்கு முன்னரே, அவரின் ஆதரவாளர்கள் பலரும் திமுக, தவெகவில் இணைந்த நிலையில் சிலர் அதிமுகவில் மீண்டும் இணைந்துவிட்டனர்.. அந்த வகையில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த வெல்லமண்டி நடராஜன் கடந்த 27-ம் தேதி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்..

இந்த நிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு பொறுப்பு வழங்கி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.. அதன்படி அதிமுக அமைப்பு செயலாளராக வெல்லமண்டி என். நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்..

Read More : “2030-ம் ஆண்டுக்குள் 7 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்..” முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்..!

RUPA

Next Post

மார்ச் மாதத்தில் அரிய கிரக சேர்க்கை..! இந்த 3 ராசிக்காரர்கள் ஏப்ரல் 11 வரை கவனமாக இருக்க வேண்டும்..!

Fri Mar 6 , 2026
மார்ச் மூன்றாவது வாரத்தில், கிரக இயக்கங்கள் பற்றிய விவாதம் ஜோதிட வட்டாரங்களில் மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ராகு, புதன் மற்றும் சுக்கிரன் ஒரே நேரத்தில் சஞ்சரிப்பதுதான். இந்த மூன்று கிரகங்களும் சேர்ந்து சனியின் ஆதிக்கத்துடன் ஒரு சிறப்பு யோகத்தை உருவாக்குகின்றன.ஜோதிடர் ராமச்சந்திர சாஸ்திரியின் கூற்றுப்படி, இந்த கிரக சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு ஒரு சவாலான காலகட்டத்தைக் குறிக்கலாம். பல சந்தர்ப்பங்களில், நாம் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், […]
astro zodiac

You May Like