கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், 3-ம் தேதி நள்ளிரவில் அந்த 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி, தப்ப முயன்ற போது, போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்.
இதையடுத்து மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த மூவர் மீதும் 8 பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.. இதுதொடர்பான விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்து 126 நாளில் இந்த வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது..
இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. கடந்த ஜனவரி 8-ம் தேதி 270 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் விரைந்து தீர்ப்பு வாழங்கி உள்ளது..



