திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர். இளங்கோ, செல்வராஜ், ஜி.கே.வாசன், தம்பிதுரை ஆகிய 6 தமிழக மாநிலங்களவை எம்.பிக்களின் பதவிக்காலம் ஏப்.2-ம் தேதி நிறைவடைய உள்ளது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி வரும் 16-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதற்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26-ம் தேதி முதல் மார்ச் 5 வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. திமுகவில் 4 இடங்களும் அதிமுக சார்பில் 2 இடங்களும் காலியாகும் நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திமுக தரப்பில் திருச்சி சிவா, கான்ஸ்டைண்டன் ரவீந்திரன் ஆகியோரும் திமுக கூட்டணியான காங்கிரஸ் தரப்பில் கிறிஸ்டோபர் மாணிக்கமும், தேமுதிக தரப்பில் எல்.கே.சுதீசும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்..
அதே போல் அதிமுக தரப்பில் மு. தம்பிதுரையும் அதிமுக கூட்டணி கட்சியான பாமக தரப்பில் டாக்டர் அன்புமனியும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.. மேலும் டாக்டர் அன்புமணியின் மாற்று வேட்பாளராக சௌமியா அன்புமணியும், சுயேச்சை வேட்பாளர்களாக அக்னி ஆழ்வார், பா. இசக்கிமுத்து, ரெ.கந்தசாமி, சாமிநாதன், பத்மராஜன், மேஷாக் கிருபாகரன், கே.பி.எம். ராஜா ஆகியோரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 6-ம் தேதி நடைபெற்றது.. இதில் டாக்டர் அன்புமணி, கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், எல்.கே. சுதீஷ், மு.தம்பிதுரை, திருச்சி சிவா ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன்.
மற்ற சுயேச்சை வேட்பாளர்களின் 7 பேரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.. இன்று மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். திமுக வேட்பாளர்கள் 4 பேர், அதிமுக வேட்பாளர்கள் 2 பேர் என 6 பேரை தவிர வேறு யாரும் மாநிலங்களவை தேர்தல் போட்டியிடாததால் மேற்கண்ட 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படனர்..
Read More : “எங்கும் கொலை, எப்போதும் கொலை.. நீங்கள் ஆண்டது போதும்.. மக்கள் மாண்டது போதும்..” இபிஎஸ் காட்டம்..!



