திடீர் ட்விஸ்ட்..! NDA கூட்டணியில் விஜய் இணைகிறாரா..? எல். முருகன் சொன்ன பரபரப்பு பதில்..!

vijay l murugan

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் அனல் பறக்க தொடங்கி உள்ளது.. திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் பெரும்பாலும் முடிவடைந்து, தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மறுபுறம் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) எந்தெந்த கட்சிகள் இடம்பெறுகின்றன என்பது இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படாத நிலை உள்ளது.


இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தவெக கட்சி என்.டி.ஏ கூட்டணியில் இணையக்கூடும் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. டெல்லி பாஜக இந்த விஷயத்தில் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி விஜய்க்கு துணை முதல்வர் பதவியும், 60 தொகுதிகளையும் வழங்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாம்.. மேலும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது..

எனினும் சமீபத்தில் இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக உடன் பாஜக பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை என்றும் அது வெறும் வதந்தி என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அதே கேள்வி எழுப்பப்பட்டபோது, தற்போது அதுகுறித்து பதில் அளிக்க முடியாது என அவர் கூறியதும் பல சந்தேகங்களை எழுப்பியது..

இதனிடையே , திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலிடம் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டில் NDA கூட்டணியின் தலைமை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் உள்ளது. எனவே கூட்டணி தொடர்பான விஷயங்களை அவரிடமே கேட்க வேண்டும் என்று கூறினார்.

தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமாரிடம் பாஜக உடன் கூட்டணியா என்ற கேள்வி முன்வைத்த போது, அவர் எந்தத் தெளிவான மறுப்பும் தெரிவிக்காமல், பல்வேறு யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்று மட்டும் கூறினார்.. இதனால் தவெக கட்சி கூட்டணி குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கணிப்புகள் தொடர்ந்தும் பேசப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியும், தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருச்சிக்கு வருகை த் அந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம், நடிகர் விஜய் NDA கூட்டணியில் இணையவுள்ளாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “எல்லோரும் வருவார்கள்” என்று கூறினார்.

எல்.முருகனின் இந்த பதில் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் விஜய்யின் என்.டி.ஏ கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற விவாதம் மீண்டும் தீவிரமாகியுள்ளது.

Read More : “ஸ்டாலினை வீட்டில் உட்கார வைத்துவிட்டு சபரீசன் திமுகவை கைப்பற்றுவார்..” ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு பேச்சு..!

RUPA

Next Post

'இந்தியர்கள் கைவிடப்பட மாட்டார்கள்': அமெரிக்கா-ஈரான் போர்.. பிரதமர் மோடி கருத்து..!

Wed Mar 11 , 2026
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான நிலை நீடித்து வரும் நிலையில், இந்தியா தனது குடிமக்களை வெளிநாடுகளில் சிக்கித் தவிக்க விடுவதில்லை என்றும், அங்குள்ள இந்தியர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதிசெய்ய பாடுபடுகிறது என்றும் கூறினார். புதன்கிழமை கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இந்த கருத்தை கூறினார். தற்போதைய சூழலில் இந்தியா வெளிநாடுகளில் உள்ள தனது குடிமக்களை சிக்கலில் விடாமல் பாதுகாக்கும் நாடாக மாறியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார். […]
pm modi n 3

You May Like