சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் திமுக தலைமை கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.. திமுக கூட்டணியில் இதுவரை இல்லாத அளவுக்கு 26 கட்சிகள் இணைந்துள்ளன..
மறுபுறம் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில், பாஜக, அமமுக, அன்புமணி தரப்பு பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.. அதிமுக தலைமையும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.. எனினும் தொகுதி பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வராவில்லை.
இதனிடையே நடிகர் விஜய்யின் தவெக கட்சி என்.டி.ஏ கூட்டணியில் இணையக்கூடும் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. டெல்லி பாஜக இந்த விஷயத்தில் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி விஜய்க்கு துணை முதல்வர் பதவியும், 60 தொகுதிகளையும் வழங்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாம்.. மேலும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது..
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் என்.டி.ஏ கூட்டணியில் விஜய் இணைவாரா என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது என்று கூறியிருந்தார்.. மத்திய இணையமைச்சர் எல். முருகனோ எல்லோரும் கூட்டணிக்கு வருவார்கள் என்று தெரிவித்திருந்தார்.. இதனால் என்.டி.ஏ கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற விவாதம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தவெக உடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. த.வெ.க. உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பது கற்பனையான ஒன்று. த.வெ.க.வை கூட்டணியில் சேர்ப்பது பற்றி அ.தி.மு.க. எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எனக்கு தெரிந்து பா.ஜ.க. தரப்பிலும் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை” என்று கூறினார்..
Read More : நாட்டிலேயே எந்த மாநிலத்தில் எல்பிஜி சிலிண்டர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன? டாப் 5 மாநிலங்கள் இதோ..!



