Flash : ராமதாஸ் தொடர்ந்த வழக்கிற்கு இடைக்கால தடை..! கட்சி உரிமை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு..!

anbumani ramadoss

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது..


இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. பாமக என்பது அங்கீகரிக்கப்படாத கட்சி.. அங்கீகரிக்கப்படாத கட்சியை பொறுத்த வரை, தேர்தல் ஆணையம் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட்டு முடிவெடுக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.. மேலும் கட்சி உரிமை கோரல் விவகாரத்தில் தீர்வு வேண்டுமானால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என்று ராமதாஸ் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது..

அதன்படி பாமக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த தடை கோரியும் கட்சியின் தலைவராக தன்னை அறிவிக்கக் கோரியும் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த மனு இன்று நீதிபதி தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது, ராமதாஸின் மனு குறித்து அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்..

இதையடுத்து பாமக கட்சி, சின்னம் தொடர்பான இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று அன்புமணி தரப்பு பதில் மனு தாக்கல் செய்தார்.. மேலும் பாமகவின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தன்னையும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றூ மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது..

இந்த நிலையில் தன்னை வழக்கில் இணைக்க உரிமையியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது என்பதால், உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, உரிமையியல் நீதிமன்ற விசாரனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.. மேலும் ராமதாஸ் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்..

Read More : சிலிண்டர் தட்டுப்பாடு.. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.. குட்நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்..!

RUPA

Next Post

ஈரானுடன் 3 முறை பேச்சுவார்த்தை நடத்திய ஜெய்சங்கர்..! எரிசக்தி பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை..!

Thu Mar 12 , 2026
மத்திய கிழக்கு அமைதியின்மை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் அவரது ஈரானிய பிரதிநிதியும் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், இந்தியா செல்லும் கப்பல்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுகுறித்து பேசிய போது “ வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரும் ஈரான் வெளியுறவு அமைச்சரும் சமீபத்திய நாட்களில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினர். கடைசியாக […]
iran

You May Like