இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால் நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன..
தமிழகத்தை பொறுத்தவரை சிறிய ஹோட்டல்கள் மூடப்பட்டாலும் பெரிய ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன.. ஊரக பகுதிகளில் உள்ள பல ஹோட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி உள்ளன.. இந்த சூழலில் சிலிண்டரை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று சமூக வலைதளங்கள் வதந்தி பரவ தொடங்கியது.. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்கள் குவிய தொடங்கினர்.. எனினும் நேற்றும் இன்றும் பெட்ரோல் பங்க்களில் பெரிதாக கூட்டம் இல்லை..
இந்த நிலையில் சிலிண்டர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.. இதை தொடர்ந்து அரசு எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை பெட்ரோல் டீசல் கையிருப்பு குறித்து விளக்கம் அளித்தார்.. அப்போது “ தமிழ்நாட்டில் 9 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது.. தொடர்ந்து பெட்ரோல், டீசலை பெற்று வருகிறோம்.. இதனால் தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசலுக்கு எந்த தட்டுப்பாடும் இருக்காது.. நேற்று முன் தினம் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் அதிகளவு கூட்டம் இருந்தது.. கிட்டத்தட்ட 100% பெட்ரோல் விற்பனையும், 75% டீசல் விற்பனையும் ஒரே நாளில் அதிகரித்துவிட்டது.. நேற்று கூட்டம் குறைந்த நிலையில் இன்று கூட்டமே இல்லை.. மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.
எல்.பி.ஜியை பொறுத்த வரை மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்கு ஒருமுறையும் கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறையும் சிலிண்டர் விநியோகம் செய்யப்படும்.. இந்த மாதம் முடியும் வரை சிலிண்டர் கையிருப்பு உள்ளது. வணிக சிலிண்டர்களை பொறுத்தவரை மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது..” என்று தெரிவித்தார்.



