“தனித்து நின்றால் விஜய்க்கும் பிரசாந்த் கிஷோர் நிலை தான்.. 15% வாக்குகள் பெற்றாலும் வெற்றி கிடைக்காது..” C-Voter நிறுவனர் பரபரப்பு கணிப்பு..!

vijay yashwanth c voter

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய்யின் தவெக முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது.. இந்த சூழலில் தவெக என்.டி.ஏ கூட்டணியில் இணையக்கூடும் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. டெல்லி பாஜக இந்த விஷயத்தில் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.


முதலில் 45 தொகுதிகள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 51 சீட் வரை ஒதுக்க பாஜக முன் வந்துள்ளது.. தவெக தனித்து நிற்பது, மீண்டும் திமுக ஆட்சிக்கு வரவே உதவும் என்று விஜய்யிடம் பாஜக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சி வோட்டர் நிறுவனர் யஷ்வந்த் தேஷ்முக் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து பரபரப்பு கருத்துகளை தெரிவித்துள்ளார்.. தனியார் நிறுவனத்தின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் “ தவெக தனித்து நின்றால் அவருக்கு எதுவும் கிடைக்காது.. ஆனால் அவர் அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்தால் ஒரு அரசியல் மாற்றம் வர வாய்ப்புள்ளது. குறிப்பாக திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும்.

விஜய் இந்த தேர்தலில் முக்கியமான சக்தியாக இருப்பார்.. ஆனால் அவர் தனித்து நின்றால் பிகாரில் பிரசாந்த் கிஷோருக்கு  ஏற்பட்ட நிலை தான் விஜய்க்கும் வரும். பிரசாந்த் கிஷோருக்கு அதிகளவில் கூட்டம் வந்தது.. ஆனால் 3% தான் வாக்கு வந்தது.. பிரசாந்த் கிஷோர் 30% வாக்கு பெறுவோம் என்று நினைத்தார்.. ஆனால் தேர்தல் முடிவுகள் வேறாக இருந்தது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக சொன்ன காலத்தில் அவரின் வாக்கு சதவீதம் 16-17% ஆக இருந்தது. விஜய்யின் வாக்கு சதவீதம் இதுவரை 15 -16 சதவீதத்தை கூட கடக்கவில்லை.. எனவே கூட்டணி சேராமல் விஜய் இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டால் அவரால் எதையும் வெல்ல முடியாது..

விஜய் தனியாக போட்டியிட முடிவு செய்தால், சிறுபான்மை வாக்குகள் மற்றும் திமுக எதிர்ப்பு வாக்குகளையும் தான் விஜய் பிரிப்பார்.. வாக்குகளை பிரிப்பதை தவிர விஜய்யால் எதையும் வெல்ல முடியாது.. விஜய் 15% வாக்குகளை பெற்றாலும் கூட அவரின் கட்சி ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாமல் போகலாம்..” என்று தெரிவித்தார்.

தவெக உடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படும் நிலையில் அவரின் இந்த கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..

Read More : தவெக NDA கூட்டணிக்கு வரணும்.. சீட் பேரத்தை உயர்த்திய பாஜக..! விஜய் வைத்த 2 டிமாண்ட்..! பரபர தகவல்கள்..!

RUPA

Next Post

இனி வீட்டு உபயோக LPG கேஸ் பயனர்களுக்கு இது கட்டாயம்..! இல்லன்னா மானியம் கிடைக்காது..! மத்திய அரசின் புதிய விதி..!

Mon Mar 16 , 2026
மார்ச் 15 அன்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், அனைத்து உள்நாட்டு LPG நுகர்வோரும் LPG சேவைகள் மற்றும் மானியங்களைத் தொடர்ந்து பெற பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் அல்லது e-KYC ஐ முடிக்க வேண்டும் என்று அறிவித்தது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் பயன்பாடுகள் மற்றும் ஆதார் FaceRD செயலி மூலம் வீட்டிலிருந்தே ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி சரிபார்ப்பு செயல்முறையை எளிதாக முடிக்க முடியும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]
Lpg gas cylinders New

You May Like