தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையம் வசம் சென்றுள்ளது.
ஏதாவது மிக முக்கிய பிரச்சனை நடந்தால் மட்டுமே, அரசு உயரதிகாரிகளை, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம்.. அதவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்று தான் செயல்பட முடியும்.. தமிழகத்தின் 17-வது சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்று அடுத்த ஆட்சி அமையும் வரை இந்த காபந்து அரசாக செயல்படும்.
இந்த நிலையம் தேர்தலின் போது வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை மட்டுமே தேர்தல் சம்மந்தமான பணிகளுக்காக செலவினம் மேற்கொள்ள இயலும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.. மேலும் “ தேர்தலில் போட்டியிடும் அனைவருக்கும் சமமான சூழலை உருவாக்கி தரும் நோக்கில் செலவினனங்கள் கண்காணிக்கப்படும். தேர்தல் கண்காணிப்பு பணி-நிலை கண்காணிப்பு குழுக்கள் மட்டுமில்லாமல் 25 துறை சார்ந்த குழக்களும் உள்ளன..
தமிழ்நாடு முழுவதும் 2,160 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.. கண்காணிப்பு குழுக்கள் மூலம் இன்றுவரை ரூ.23.28 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நிலையில் உள்ளன. பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இன்று வரை தமிழ்நாடு முழுவதும் 1.68 லட்சம் சுவர் விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது..



