Flash : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.. இழுபறிக்கு பின் ஒப்பந்தம் கையெழுத்தானது..!

dmk cpi

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. 


தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஆளுங்கட்சியான தி.மு.க மெகா கூட்டணியை அமைத்துள்ளது.. 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.. அதாவது, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, சமத்துவ மக்கள் கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், கொங்கு இளைஞர் பேரவை, வல்லரசு பார்வர்டு பிளாக், ஆதி தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, ஆதி தமிழர் கட்சி, புதிய திராவிடர் கழகம், தமிழர் தேசம் கட்சி, அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் திமுக கூட்டணியின் இடம்பெற்றுள்ளன.

திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும்,  கொமதேக கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. திமுக – இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.. 4-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் திமுக – இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின், சிபிஐ மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற சிபிஐ கட்சிக்கு இந்த முறை 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Read More : Flash : குட்நியூஸ்..! ஒரே நாளில் ரூ.5,000 சரிவு..! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!

RUPA

Next Post

தமிழகத்தில் வேகமாக அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம்..! ‘போதை இல்லா தமிழ்நாடு’ வாக்குறுதி என்ன ஆனது..?

Wed Mar 18 , 2026
அதிகரித்து வரும் போதைப்பொருள் பறிமுதல் சம்பவங்கள், வன்முறை குற்றங்கள் மற்றும் பள்ளிகளில் இருந்து வரும் கவலைக்கிடமான தகவல்கள், மாநிலம் முழுவதும் போதைப் பொருட்கள் புழக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது என்பதை காட்டுகிறது.. இதன் காரணமாக “போதை இல்லா தமிழ்நாடு” என்ற வாக்குறுதி என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.. செயற்கை மாத்திரைகள் முதல் பாரம்பரிய போதைப்பொருட்கள் வரையிலான போதைப்பொருட்கள் முன்பை விட எளிதாக இளைஞர்களை சென்றடைகின்றன என்பதை சமீபத்திய தரவுகளும் […]
tamilnadu drugs

You May Like