fbpx

விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை!… அவசரகதியில் சட்டம் கொண்டுவர முடியாது!… மத்திய அமைச்சர் திட்டவட்டம்!

அனைத்து பங்குதாரர்களையும் கலந்தாலோசிக்காமல் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (எம்.எஸ்.பி.) உறுதி செய்யும் சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வர முடியாது என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லையை முற்றுகையிட்டு விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அனைத்து பங்குதாரர்களையும் கலந்தாலோசிக்காமல் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (எம்.எஸ்.பி.) உறுதி செய்யும் சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வர முடியாது என்றும், விவசாயிகள் அரசுடன் முறையான பேச்சுவார்த்தையை நடத்த முன்வர வேண்டும் எனவும் மத்திய விவசாயத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.

வேளாண்மை, மாநிலம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இதுபோன்ற சட்டத்தை உருவாக்கினால், மாநிலங்களை ஆலோசிக்காமல் சட்டம் கொண்டுவந்தது எப்படி என்று கேள்வியை சிலர் எழுப்புவார்கள் என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

Kokila

Next Post

அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கட்..!! கடும் நடவடிக்கை பாயும்..!! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..!!

Wed Feb 14 , 2024
அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் […]

You May Like