Breaking : குடும்ப தலைவிகளுக்கு இலவச ஃப்ரிட்ஜ் வழங்கப்படும்.. அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் இபிஎஸ்..!

Eps admk manifesto

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, ராமதாஸ் – சசிகலா அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. 


இந்த நிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இபிஎஸ் இன்று வெளியிட்டார்.. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ சட்டமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மு.க ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்துள்ளனர்..

ஏற்கனவே 3 கட்டமாக நாங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம்.. எல்லா குடும்பத்திற்கும் ரூ.10,000, பெண்களுக்கு ரூ.2000 வழங்கப்படும், ஆண்களும் கட்டணம் இல்லாமல் பேருந்துகளில் பயணிக்கலாம், வீடுகள் இல்லாத ஏழைகளுக்கு தரமான வீடுகள் கட்டித்தரப்படும். ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும்.. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஃப்ரிட்ஜ் விலையில்லாமல் வழங்கப்படும்..ரேஷன் கடைகளில் 1 கிலோ பருப்பு, சமையல் எண்ணெய் விலை இல்லாமல் வழங்கப்படும். 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும்” என்று தெரிவித்தார்..

தொடர்ந்து பேசிய அவர் “ 500 வாக்குறுதிகள் அளித்த திமுக 4-ல் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. நாங்கள் அறிவித்த 297 அறிவிப்புகளையும் நிறைவேற்றுவோம்..” என்று கூறினார்..

Read More : Breaking : திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. ஒப்பந்தம் கையெழுத்து..!

RUPA

Next Post

இந்தியாவில் கருணைக்கொலைக்கு அனுமதிக்கப்பட்ட முதல் நபர்.. ஹரீஷ் ராணா, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்..!

Tue Mar 24 , 2026
இந்தியாவில் முதன்முறையாக செயற்கை கருணைக்கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரிஷ் ராணா, 13 ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் இருந்த நிலையில், செவ்வாயன்று அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) காலமானார்.. 31 வயதான அவர், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பி.டெக் மாணவராக இருந்தபோது, 2013-ஆம் ஆண்டில் நான்காவது மாடி பால்கனியிலிருந்து தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் சுயநினைவற்ற நிலையில் இருந்தார். அன்று முதல் அவர் செயற்கை […]
harish rana death 1774351715

You May Like