2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வேர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன..
இந்த கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும், தமாகாவுக்கு 5 தொகுதிகளும், ஐஜேகேவுக்கு 2 தொகுதிகளும், புரட்சி பாரதம், தமிழக முன்னேற்றக் கழகம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.. அதன்படி ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய தொகுதிகளில் தமாகா போட்டியிடுகிறது..
இந்த நிலையில் தமாகா சார்பில் 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் ஜி.கே வாசன் அறிவித்தார்.. சென்னை ஆழ்வேர்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் 12.12 மணிக்கு வேட்பாளர்களை அறிவித்தார்.. 12.12 என்பது நல்ல நேரம் என நம்புவதால் அந்த நேரத்தில் வேட்பாளர்களை அறிவிப்பதாக அவர் கூறினார்..
தாமரை சின்னத்தில் போட்டியிடுவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த முறை சைக்கிள் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியதால் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார்.. சின்னம் என்ன என்பதை விட களப்பணியும் கூட்டணியின் பலமும் முக்கியம் என்றும் அவர் கூறினார். திமுக அமைச்சர்களுக்கு தமிழக மக்கள் மத்தியில் கடுமையாக எதிர்ப்பு இருப்பதாகவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் தமாகா வேட்பாளர் பட்டியலை ஜி.கே. வாசன் வெளியிட்டார்..
தமாகா வேட்பாளர் பட்டியல்
ராணிப்பேட்டை – வி.எம்.கார்த்திகேயன்
ஈரோடு மேற்கு – எம்.யுவராஜா
ஒட்டன்சத்திரம் – விடியல் சேகர்
கும்பகோணம் – எம்.கே.ஆர் அசோக் குமார்
கிள்ளியூர் – ஜே. நிவின் சைமன்
Read More : “விஜய் சரியான நேரத்திற்கு வர வேண்டும்..” தவெக நிர்வாகிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் அட்வைஸ்..!



