“ எனது பிரச்சாரத்திற்கு அனுமதி தரல.. திமுக தான் காரணம்..” தலைமை தேர்தல் அதிகாரியிடம் விஜய் நேரில் புகார்..!

vijay n

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் தலைவர்கள் பலர் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில், விஜய் நாளை பெரம்பூரில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.. தேர்தலில் அவர் பெரம்பூரில் போட்டியிட உள்ளதாக கூறப்படும் நிலையில் பெரம்பூரில் இருந்தே தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.. பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் ஆகிய 5 இடங்களில் இன்று விஜய் பிரச்சாரம் செய்யவிருந்தார்..


ஆனால் இன்று பெரம்பூர் தொகுதியில் எம்.கே.பி நகர் பேருந்து நிலையம் அருகே விஜய் பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தவெக தரப்பில் 3000 நபர்கள் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், 3000 பேருக்கு இடம் போதாது என்று காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. மாற்று இடம் கேட்டு விண்ணப்பம் தர காவல்துறை தரப்பு அறிவுறுத்தி உள்ளது.. இதையடுத்து திமுகவுக்கு சார்பான அதிகாரிகள் தனது பிரச்சாரத்தை முடக்குவதாக விஜய் கண்டனம் தெரிவித்திருந்தார்..

இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து தவெக தலைவர் விஜய் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து புகார் அளித்தார். சென்னை தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் அவர் தனது புகார் அளித்தார்.. பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்காமல் சில அதிகாரிகள் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் விஜய் குற்றம்சாட்டி உள்ளார். மேலும் தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று விஜய் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்..

RUPA

Next Post

Breaking : திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக போட்டியிடும் தொகுதிகள் என்னென்ன..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது..!

Sat Mar 28 , 2026
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..  தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் […]
Dmk Alliance 2026

You May Like