18 தொகுதிகளில் உதய சூரியனுடன் நேரடியாக மோதும் தாமரை..! சிட்டிங் அமைச்சர்களை எதிர்த்து களமிறங்கும் பாஜக வேட்பாளர்கள்.. லிஸ்ட்..!

BJP DMK FLAG

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் திமுக சார்பில் போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்..


சிட்டிங் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் பலரும் தங்களது தொகுதியில் மீண்டும் போட்டியிடுகின்றனர்.. மேலும் அம்பத்தூர், தி.நகர், அண்ணா நகர், ராயபுரம், எழும்பூர், திரு.விக. நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் 18 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் மருத்துவர்கள் 15 பேர், முனைவர் 7 பேர், சட்டம் படித்தவர்கள் 29 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் இதன் மூலம் 120 தொகுதிகளில் திமுகவும் அதிமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றன.. 18 தொகுதிகளில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது..

திமுக – பாஜக நேரடியாக போட்டியிடும் தொகுதிகள் எவை..?

ஆவடி

மயிலாப்பூர்

திருவண்ணாமலை

ராசிபுரம் (தனி)

கோவை வடக்கு

அவிநாசி (தனி)

திருப்பூர் தெற்கு

திருவாரூர்

தஞ்சாவூர்

புதுக்கோட்டை

திருப்பத்தூர்

மானாமதுரை

ராமநாதபுரம்

திருச்செந்தூர்

வாசுதேவநல்லூ

ராதாபுரம்

நாகர்கோயில்

இதில் 5 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் சிட்டிங் அமைச்சர்களை எதிர்த்து களமிறங்க உள்ளது.. திருவண்ணாமலை தொகுதியில் எவ. வேலு, திருப்பத்தூர் தொகுதியில் அமைச்சர் பெரிய கருப்பன், ஆவடியில் அமைச்சர் நாசர், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன், ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோரை எதிர்த்து பாஜக வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

Read More : 3 அமைச்சர்களுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய செந்தில் பாலாஜி.. 120 தொகுதிகளில் திமுக – அதிமுக நேரடிப் போட்டி..!

RUPA

Next Post

காலையில் தோன்றும் குமட்டல், வாயுத் தொல்லை.. அசால்ட்டா இருக்காதீங்க.. உயிருக்கே ஆபத்து!

Sun Mar 29 , 2026
Do you have these symptoms when you wake up in the morning? Go to the doctor immediately!
morning heart attack 11zon

You May Like