பீகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தில் இன்று ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்தது. ஷீத்லா கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 8 பெண்கள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். இச்சம்பவம், தீப்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மக்ரா கிராமத்தில் நடைபெற்றது.
கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் பல பக்தர்கள் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. அங்கு பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.
கோவில் நிர்வாகம் மற்றும் நிர்வாகத்தின் அலட்சியமே கூட்ட நெரிசலுக்கு காரணம் என்று கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.. உள்ளூர் கிராம திப்நகர் காவல்துறை, சதர் டிஎஸ்பி மற்றும் எஸ்.டி.எம் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று சம்பவ இடத்திற்கு வந்து, இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிய, காவல்துறை தற்போது காயமடைந்தவர்களுடன் பேசி வருகிறது.
திருவிழாக்கள் மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகளின் போது இந்த கோயிலில் அடிக்கடி பெருந்திரளான மக்கள் கூடுவதுண்டு. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதுமான காவல்துறையினரோ அல்லது முறையான தடுப்புகளோ அமைக்கப்படவில்லை என உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என நிர்வாகம் உறுதியளித்துள்ளதுடன், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சூளுரைத்துள்ளது.
Read More : இந்தியாவில் சீன CCTV கேமரா விற்பனைக்குத் தடை..! மத்திய அரசின் புதிய விதி.! ஏப்ரல் 1 முதல் அமல்..!



