fbpx

வந்தது அதிரடி உத்தரவு…! திரையரங்கில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க கூடாது…! முழு விவரம்

நேற்று வெளியான “Siren 108” என்ற திரைப்படத்திற்கு 18.02.2024 வரை (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) மட்டும் சிறப்புக்காட்சி திரையிடுதலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் “Siren 108” திரைப்படத்திற்கான ஒரு சிறப்புக் காட்சியை 18.02.2024 வரை (அதாவது ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) தொடக்க காட்சி காலை 9.00 A.M-க்கும் இறுதிக்காட்சி 2.00 A.M மணியளவில் முடிவடையும் வகையில் திரையிடப்பட வேண்டும். தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) விதிகள், 1957 விதிகளின்படி 14A படிவம் ‘சி’ உரிமத்தின் நிபந்தனையின்படி புதிய திரைப்படம் வெளியிடும் நிகழ்ச்சியின் போது, திரையரங்க உரிமையாளர்கள் முறையான போக்குவரத்து மற்றும் பார்க்கிங் வசதி செய்ய வேண்டும். இந்நேர்வில் பின்வரும் நிபந்தனைகள் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது:

திரையரங்குகளில் கூடுதல் காட்சி நடத்தப்படும் நேர்வில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். திரைப்படம் காண்போரின் போக்குவரத்து உள்வருதல், வெளியேறுதல்; வாகனம் நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும் இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும். அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக நுழைவுக்கட்டணங்கள் (Ticket fee) வாகன நிறுத்தக்கட்டணம் (Parking fee) வசூலிக்கக்கூடாது. திரையரங்குகள் மேற்படி விதிமுறைகளை மீறினால் 04286 299137 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இன்றுமாலை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்14!

Sat Feb 17 , 2024
வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே அனுப்புவதற்காக இன்சாட் 3டிஎஸ் செயற்கைகோள் இன்றுமாலை விண்ணில் செலுத்தப்படவுள்ளது நம் நாட்டுக்கு முக்கிய தேவையான தொலைத்தொடர்பு, தொலைஉணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியிலும் பல்வேறு சாதனைகளை செய்துவருகிறது. இதற்கிடையே, உலகளாவிய பருவநிலை மாற்றம் தற்போது பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. புயல், கனமழை போன்ற […]

You May Like