பங்குனி மாத பௌர்ணமியில் உத்திரம் நட்சத்திரம் கூடிவரும் ஒரு புனிதமான நாள் தான் பங்குனி உத்திரம்.. அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி உத்திரம் இன்று (ஏப்ரல் 1, 2026) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிவன்-பார்வதி, முருகன்-தெய்வானை, ராமன்-சீதை போன்ற தெய்வத் திருமணங்கள் நடைபெற்றதாக நம்பப்படுவதால், இது “கல்யாண விரத” நாளாகவும், திருமணத் தடைகள் நீக்கும் நாளாகவும் கருதப்படுகிறது.
தமிழ் மாதங்களில் 12-வது மாதமான பங்குனி மாதமும், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரமும் கூடும் நாளை 12 திருக்கரங்களால் பக்தர்களை காக்கும் தமிழ் கடவுளாம் முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்றாக பங்குனி உத்திர விரதம் உள்ளது.. பங்குனி உத்திரம் அன்று முருகப் பெருமானின் அருளை பெற எப்படி விரதிருமிருக்க வேண்டும் என்று பார்க்கலாம்..
பங்குனி உத்திரத்திற்காக பலரும் 48 நாட்கள், 21 நாட்கள் என விரதம் இருக்கின்றனர்.. ஆனால் பங்குனி உத்திரம் என்பது ஒரு நாள் விரதம் தான்.. அதனால் ஏப்ரல் 1-ம் தேதி, அதாவது இன்று ஒரு நாள் விரதம் இருந்தால் போதுமானது.. திருமணம் அல்லது குழந்தை பேறு வேண்டி விரதம் இருப்பவர்கள் இன்று அதிகாலையில்யே குளித்துவிட்டு விரதத்தை தொடங்கலாம்..
முருகப் பெருமானின் படத்தை மலர்களால் அலங்கிரிக்கலாம்.. குறிப்பாக செவ்வரளி மலர்களால் முருகப் பெருமானை அலங்கரிப்பது சிறப்பு.. பால், பழம், தேன், தினைமாவு, பாயாசம், சர்க்கரை பொங்கல் என ஏதேனும் ஒரு இனிப்பு வகையை முருகப்பெருமானுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும்.
முருகனின் படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்து, கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல், கந்தர் அநுபூதி, திருப்புகழ் இவற்றில் ஏதேனும் ஒரு முருகன் பாடலை மனதார படிக்கலாம்.. எந்த மந்திரமும் தெரியாது எனில் ‘ஓம் சரவண பவ’ என்ற மத்திரத்தை 180 முறை முருகனை நினைத்து மனதார சொல்லலாம். உங்கள் வேண்டுதலை முருகனிடம் சொல்லி மனதார வேண்டிக் கொண்டு விரத்தை தொடங்க வேண்டும்.. பங்குனி உத்திர நாளன்று முழு உபவாசமாக இருப்பது சிறப்பு.. அப்படி விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.. முழு உபவாசமாக இருக்க முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்..
அருகில் இருக்கும் முருகன் கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை மனதார வழிபடலாம்.. சில கோவில்களில் அன்றைய தினம் திருக்கல்யாணம் வைபவம் நடக்கும்.. அதை தரிசித்துவிட்டு வரலாம்.
மாலை 6 மணிக்கு பின் வீட்டில் முருகப்பெருமான் படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்து, ஏதேனும் நைவேத்தியம் படைத்து வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று முருகனிடம் மனதார வேண்டிக் கொள்ளுங்கள்..
பிறகு முருகனுக்கு தீப, தூபம் காட்டி பூஜை செய்து வழிப்பட்டு பின் முருகனுக்கு படைத்த பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.. இப்படி விரதம் இருந்தால் அடுத்த ஆண்டு பங்குனி உத்திரத்திற்குள் உங்களின் வேண்டுதலை முருகப்பெருமான் நிறைவேற்றுவார் என்று நம்பப்படுகிறது..
Read More : மீன ராசிக்கு கிடைத்த சக்திவாய்ந்த ராஜ யோகம்..! இந்த 3 ராசிகளின் தலைவிதியே மாறியுள்ளது..!



