மீண்டும் தனிப்பெரும்மை உடன் திமுக ஆட்சியை பிடிக்கும்.. 2-வது இடத்தில் அதிமுகவா? தவெகவா? புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள்..!

stalin eps vijay

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராமதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. 


முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான், உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சார்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதனிடையே 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன..

இந்த நிலையில் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு லோக்போல் என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.. ஒவ்வொரு தொகுதியிலும் 500 நபர்கள் 234 தொகுதிகளிலும் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு அடிப்படையில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது..

அதன்படி 2026 தேர்தலில் திமுக அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை தக்க வைக்கும் என்று லோக் போல் அமைப்பு கணித்துள்ளது.. திமுக 181 -189 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக லோக்போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.. திமுகவுக்கு 40% வாக்குகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.. திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை பரவலாக இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக 38 முதல் 42 தொகுதிகளை கைப்பற்றும், அதிமுக கூட்டணி 29% வாக்குகளை பெறும் என்றும் லோக் போல் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.. இந்த தேர்தலில் முதன்முறையாக களமிறங்கும் விஜய்யின் தவெக 8 – 10 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. தவெக வாக்கு சதவீதம் 23.9% வாக்குகளை கைப்பற்றும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் சீமானின் நாம் தமிழர் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது எனவும், நாம் தமிழர் கட்சி 4.9% வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. பிறக் கட்சிகள் 2.9% வாக்குகளை பெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Read More : உச்ச நடிகர், கிறிஸ்தவர் என்ற டேக் மட்டும் போதுமா..? திருச்சி கிழக்கில் ஜோசப் விஜய் வெல்வாரா..? கள நிலவரம் என்ன..?

RUPA

Next Post

இந்தியாவில் போர் லாக்டவுன்.. இணையத்தில் வைரலான அறிவிப்பு.. பீதியில் மக்கள்.. உண்மை என்ன..?

Wed Apr 1 , 2026
அமெரிக்கா ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில் இந்தியாவில் “போர் லாக்டவுன்” அமலுக்கு வரும் என்ற அறிவிப்பு சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை போல வடிவமைக்கப்பட்ட அந்த செய்தியில், இந்தியாவில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.. இதனால் பல சமூக ஊடக பயனர்கள் இடையே பதற்றம் ஏற்பட்டது. ஆனால் உண்மையில், இப்படிப்பட்ட எந்த லாக்டவுன் அறிவிப்பையும் எந்த மத்திய அரசு வெளியிடவில்லை.. அந்த தகவல் முழுவதும் போலியானது. […]
war lockdown

You May Like