கடற்படை கப்பல் பழுதுபார்க்கும் தளம் மற்றும் கடற்படை விமானத் தளங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 240 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலிப்பணியிடங்கள்: பிட்டர் (Fitter) பிரிவில் 31 இடங்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பிரிவில் 21 இடங்கள், எலக்ட்ரீசியன் (Electrician) பிரிவில் 29 இடங்கள், எலக்ட்ரானிக் மெக்கானிக் (Electronic Mechanic) பிரிவில் 18 இடங்கள், இன்ஸ்ட்ரூமென்ட் பிரிவில் 15 இடங்கள், வெல்டர் (Welder) பிரிவில் 14 இடங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறை பிரிவுகள் அடங்குகின்றன.
கல்வித்தகுதி: விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கட்டாயமாக ஐ.டி.ஐ. (ITI) தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 01.06.2026 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.04.2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுப்ப வேண்டிய முகவரி: “The Admiral Superintendent (for Officer-in-Charge ATS), Apprentices Training School, Naval Ship Repair Yard, Naval Base, Kochi – 682 004.
Read more: வெள்ளியங்கிரி மலையில் மீண்டும் சோகம்.. மயங்கி விழுந்து கல்லூரி மாணவன் பலி..!



