fbpx

LOAN | 33% வட்டி மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன்..!! அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!!

LOAN | ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் கடன் திட்டம் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 33% வட்டி மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களுக்கான இலவச திட்டத்திற்கு ரூ.1,521 கோடியும், டீசல் மானியம் பெற ரூ.1,200 கோடியும், புரதான புராதனக் கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

அதேபோல தமிழ்நாடு, இந்தியாவின் பிற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி, கைவினைப் பொருள்கள் விற்பனைக்காக சென்னையில் வணிக வளாகம் கட்டப்படும் என்றும் அதற்காக ரூ.227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.20 கோடியில் கரூர், ஈரோடு ,விருதுநகர் மாவட்டங்களில் சிறிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Loan up to Rs.10 Lakh with 33% Interest Subsidy

Read More : https://1newsnation.com/breaking-rs-1000-per-month-for-students-too-notification-issued-in-the-legislative-assembly/

Chella

Next Post

இன்று நடக்கும் 'த.வெ.க' கட்சியின் ஆலோசனை கூட்டம்.! தலைவர் 'VIJAY' எடுக்க இருக்கும் முக்கிய முடிவுகள்.!

Mon Feb 19 , 2024
நடிகர் விஜய்யின் (Actor Vijay), தமிழக வெற்றிக் கழக மாவட்ட தலைமை நிர்வாகிகள் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை, உள்கட்சி கட்டமைப்பு ஆகியவற்றைப் பற்றி விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி, நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரிடப்பட்ட அந்தக் கட்சிக்கு, ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்தனர். […]

You May Like