புதுச்சேரியில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து தட்ட்சாஞ்சாவடியில் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது.. கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகம் 2 தொகுதிகள் போட்டியிடுகிறது.. மக்களோடு மக்களாக நிற்பவர்களையே தேர்ந்தெடுத்து வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளேன்..
புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி குழப்பிப் போன கூட்டணியாக உள்ளது.. ஒரே தொகுதியில் காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.. என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி சோர்ந்து போன கூட்டணியாக உள்ளது.. ஏமாற்று கூட்டணி, பொருந்தா கூட்டணி, ஓட்டை உடைசல் கூட்டணிக்கு வாக்களித்து ஏமாந்து போகாதீர்கள்..
காங்கிரஸ் பாஜக என இரு கட்சிகள் ஆண்டாலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வாங்கிக் கொடுக்கவில்லை.. இந்த இரண்டு கூட்டணிக்கும் உங்களுக்கு எதுவும் செய்ய மாட்டார்கள். தீய சக்தி திமுக இருக்கும் காங்கிரஸ் கூட்டணியும் வேண்டாம்.. பாஜக கூட்டணியும் வேண்டாம்.. தேர்தல் என்பது ஒன்றும் பரீட்சை பேப்பர் இல்லை.. அதில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல.. மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தில் வேண்டும்..” என்று தெரிவித்தார்..



