Multiplex Theaters | இதுதொடர்பாக தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் சினிமா மட்டுமே ஒளிபரப்பப்பட வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால், மற்ற மாநிலங்களில் இசை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கூட நடத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
நடந்து முடிந்த கால்பந்து போட்டியை நிறைய மாநிலங்களில் உள்ள பிவிஆரில் தியேட்டர்களில் ஒளிபரப்பு செய்தனர். இதனால் அவர்களுக்கு படம் ஓடாவிட்டாலும் ஏதாவது ஒரு வகையில் லாபம் கிடைக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள அனுமதி கோரி தமிழ்நாடு அரசிடம் மனு கொடுக்கவுள்ளோம். தியேட்டரில் தின்பண்டங்கள் விலை அதிகரிப்பு குறித்தும் பார்க்கிங் கட்டண விலை குறித்தும் கேட்கிறீர்கள். வியாபாரத்தில் உணவு பொருளை பொருத்தமட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலை என்பது ஒன்றும் கிடையாது.
சிறிய படங்களை பார்க்க மக்களே விரும்பவில்லை. இதனால் அதன் கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளோம். உள்ளூர் பொழுதுபோக்கு வரியை நீக்க வேண்டும். ஏப்ரல் 1ஆம் தேதி முதல் திரையரங்குகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பேட்டா தரப்படமாட்டாது என தீர்மானம் எடுத்துள்ளோம். திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தவும் கோரிக்கை வைத்துள்ளோம். 70, 80 சதவீதம் வரி வசூலிக்கப்படுவதால், எங்களுக்கு லாபமே இல்லை. இதனால் தியேட்டர்களை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்தனர்.
Read More : https://1newsnation.com/sonia-gandhi-no-one-can-stand-against-sonia-gandhi-becomes-rajya-sabha-mp/