ஒவ்வொரு தனிநபர் மீது தனித்தனியாக நடவடிக்கை.. ஜனநாயகன் படம் லீக்.. படக்குழு கடும் எச்சரிக்கை..!

jananaygan vijay

விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக பொங்கலுக்கு வெளியாகவில்லை.. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடியது தயாரிப்பு நிறுவனம்.. எனினும் இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வராததால் மீண்டும் சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டிக்கே படத்தை படக்குழு அனுப்பியது..


ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் படத்தை பார்த்து வெளியீடு தொடர்பாக முடிவெடுக்க சென்சார் கமிட்டி பரிந்துரை செய்ததது. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தது.. இந்த நிலையில், நேற்றைய தினம் ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது படக்குழு மற்றும் தளபதி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் இன்று அதிகாலை 3 மணிநேரம் கொண்ட முழுப் படமும் இணையத்தில் லீக் ஆனது. இணையத்தில் வெளியான ஜன நாயகன் படத்தை நீக்கும் முயற்சியில் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இணையத்தில் கசிந்த ஜன நாயகன் திரைப்படத்தை யாரும் பகிர வேண்டாம் என்று இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் லீக்கான காட்சிகளை பதிவிறக்கம் செய்தாலோ அல்லது பகிர்ந்தாலோ கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு எச்சரித்துள்ளது.. கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அவரின் வழக்கறிஞர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நான் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனத்தின் சட்ட ஆலோசகர்.விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், திரையரங்கு, சாட்டிலைட், ஓடிடி மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய மதிப்பைக் கொண்டுள்ளது.

‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் சில காட்சிகள், சில நபர்களால் சட்டவிரோதமாக அணுகப்பட்டு, பதிவிறக்கம் செய்யப்பட்டு, நகலெடுக்கப்பட்டு, பல மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பப்பட்டு, பல்வேறு சமூக ஊடகத் தளங்கள் மூலம் டிஜிட்டல் கசிவு ஏற்படும் தீவிர அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன என்பது எனது கட்சிக்காரரின் கவனத்திற்கு மிகுந்த அதிர்ச்சியுடனும் அவசரத்துடனும் வந்துள்ளது.

ஜன நாயகன் திரைப்படத்தின் கசிந்த காட்சிகள் அல்லது காணொளிகளை வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப், இணையதளங்கள், டோரண்ட்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பதிவிறக்கம் செய்வது. அனுப்புவது, பகிர்வது, பதிவேற்றுவது, மீண்டும் பதிவிடுவது, சேமிப்பது அல்லது பரப்புவது ஒரு கடுமையான குற்றச்செயல் மற்றும் பதிப்புரிமை மீறலாகும் என்றும், இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரும் தனித்தனியாக குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுவார்கள் என்றும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

ஜன நாயகன் திரைப்படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்து அனுப்பிய நபருக்கு எதிராக எனது கட்சிக்காரர் ஏற்கனவே உரிய சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார். மேலும், இத்தகைய சட்டவிரோதப் பரப்பலில் ஈடுபட்ட அனைத்து நபர்களுக்கும் எதிராக மேலதிக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜன நாயகன் தொடர்பான கசிந்த உள்ளடக்கத்தை எந்தவொரு டிஜிட்டல் அல்லது சமூக ஊடகத் தளம் வழியாகவும் எந்த வகையிலும் பதிவிறக்கம் செய்யவோ, பெறவோ, சேமிக்கவோ, அனுப்பவோ, பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எவரும், அதன் விளைவுகளுக்குத் தங்கள் சொந்தப் பொறுப்பில், உடனடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.” என்று தெரிவித்துள்ளார்..

Read More : ஜனநாயகன் முழுப்படமும் இணையத்தில் லீக்.. காரணமே விஜய்தான்..? ஒன்னுமே புரியலையே!

RUPA

Next Post

வீட்டில் AC பயன்படுத்துறீங்களா? இந்த டிப்ஸ் ஃபாலோவ் செய்தால் கரெண்ட் பில் பாதியா குறையும்..!

Fri Apr 10 , 2026
Do you use AC? Just do this one thing and your electricity bill will be halved!
ac power

You May Like