“ஏஐ அமைச்சகம்.. மனுவிற்கு பதிலளிப்பது கட்டாயமாக்கப்படும்” தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டு விஜய் பரப்புரை..!!

vijay tvk

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தென் மாவட்டங்களில் தனது கட்சியை வலுப்படுத்தும் வகையிலும், வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுப்பட்டு வருகிறார். சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, காரைக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தன்னுடைய பிரச்சாரத்தை நிறைவு செய்த விஜய் இன்று கன்னியாகுமரியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.


பிரச்சாரம் நடைபெறும் மகாதானபுரம் ரவுண்டாவிற்கு தனது வாகனத்தில் வந்த விஜய், சைக்கிளில் சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின்னர் பிரச்சார வாகனத்தில் ஏறி கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்தார். தொடர்ந்து தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டு கூறினார்.

அவர் பேசுகையில், தமிழ்நாடு சேவை உரிமை சட்டம் 6 மாதத்தில் நிறைவேற்றப்படும். மாநில வளர்ச்சிக்கான யோசனையை பொதுமக்களும் தெரிவிக்க இணையதளம் தொடங்கப்படும். சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒரு முழு நாள் மக்களின் மனுக்கள் தொடர்பாக விவாதிக்கப்படும். மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு அரசு பதில் அளிப்பது கட்டாயமாக்கப்படும்.10 ஆயிரம் கையொப்பங்களுடன் ஒரு மனு சமர்ப்பித்தால் அரசு விளக்கம் அளிப்பது கட்டாயமாக்கப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்ததும் செயற்கை நுண்ணறிவு அமைச்சகம் உருவாக்கப்படும். தமிழ் நாட்டில் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் உருவாக்கபடும். மக்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட கூடுதல் வரி வசூலிக்கப்படாது. அத்தனை வலிகளையும் தாங்கி கொண்டு உங்களுக்காக வந்திருக்கிறேன் என்றார்.

Subscribe to my YouTube Channel

Read more: கன்னியாகுமரி: வாயில் விசில்.. சைக்கிளில் மாஸ் என்ட்ரீ கொடுத்த விஜய்.. காதை கிழித்த அந்த சத்தம்..!

English Summary

Vijay’s campaign lists TVK election promises..

Next Post

சந்திரன் மற்றும் ராகுவின் சேர்க்கை.. ஏப்ரல் 13 முதல் இந்த 4 ராசிகளுக்கும் சிரமங்கள் ஏற்படும்..!

Sun Apr 12 , 2026
The conjunction of the Moon and Rahu.. From April 13th, all 4 zodiac signs will face difficulties..!
zodiac yogam horoscope

You May Like