விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக பொங்கலுக்கு வெளியாகவில்லை.. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடியது தயாரிப்பு நிறுவனம்.. எனினும் இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வராததால் மீண்டும் சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டிக்கே படத்தை படக்குழு அனுப்பியது..
ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் படத்தை பார்த்து வெளியீடு தொடர்பாக முடிவெடுக்க சென்சார் கமிட்டி பரிந்துரை செய்ததது. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தது.. இந்த நிலையில், நேற்றைய தினம் ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது படக்குழு மற்றும் விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பட தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
இந்த நிலையில் கோவையில் உள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஜனநாயகன் படம் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.. கருமத்தம்பட்டியில் உள்ள ராசி என்ற உள்ளூர் தொலைக்காட்சியில் ஜனநாயகன் படம் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. ஜனநாயகன் படத்தை டவுன்லோடு செய்து பரப்பியவர்கள் கைது செய்யப்படும் நிலையில் தற்போது லோக்கல் சேனலில் ஜனநாயகன் ஒளிபரப்பான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
Read More : மீண்டும் படத்தில் நடிக்க விஜய் முடிவு..! இந்த 3 பேரில் ஒருவர் தான் டைரக்டர்..! குஷியில் ரசிகர்கள்..!



