fbpx

‘இந்த நன்றி கெட்டவர்களுக்கா உணவளிக்கிறீர்கள்’..? ’இனியும் வேண்டாம்’..!! Modi அரசை தாக்கிய நடிகர் கிஷோர்..!!

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை தடுக்கும் விதமாக போலீசார், விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஆடுகளம், பொல்லாதவன் படங்களில் நடித்த கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ”விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க சாலைகள் தோண்டப்பட்டன. சுவர்கள் எழுப்பப்பட்டன. குழிகள் வெட்டப்பட்டன. துப்பாக்கிக் குண்டுகள் புறப்பட்டன. கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. ஒவ்வொரு நாளும் தனது வார்த்தையை மாற்றிக்கொள்ளும் மோடியின் அரசாங்கம் இவை அனைத்தையும் செய்தது. விவசாயிகள் இனியாவது தங்களுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பும் மோடிக்கும், அவரது அரசுக்கும், அவர்களது பக்தர்களுக்கும் உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

இந்த நன்றி கெட்டவர்களுக்கு மட்டுமல்ல, தங்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியவர்களுக்கும் தொடர்ந்து உணவளிக்கிறார்கள் இவர்கள். இத்தனை கருணையுள்ள இவர்கள் தேசவிரோதிகளா?” என்று விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர் கிஷோர் பதிவிட்டுள்ளார்.

English Summary : Actor Kishore who attacked the Modi government

Read More : Doctors | ’மருத்துவர்களே இனி தவறை மட்டும் செய்யாதீங்க’..!! எச்சரிக்கும் தமிழ்நாடு அரசு..!!

Chella

Next Post

DMK: பரபரப்பில் அரசியல் களம்!... இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!... தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை!

Fri Feb 23 , 2024
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை திமுக மாவட்ட செயலாளரள் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறவுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த ஆலோசனை கூட்டமானது காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறும் எனவும், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் […]

You May Like