விஜய் அடுத்ததாக ஒரு படம் நடிப்பார் என்பது வதந்தி.. விஜய் நண்பர் ஸ்ரீநாத் தகவல்..!

vijay srinath

விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக பொங்கலுக்கு வெளியாகவில்லை.. விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக பொங்கலுக்கு வெளியாகவில்லை.. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடியது தயாரிப்பு நிறுவனம்.. எனினும் இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வராததால் மீண்டும் சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டிக்கே படத்தை படக்குழு அனுப்பியது..


ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் படத்தை பார்த்து வெளியீடு தொடர்பாக முடிவெடுக்க சென்சார் கமிட்டி பரிந்துரை செய்ததது. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ஜனநாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தது.. ஆனால் கடந்த வாரம் ஜனநாயகன் படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது படக்குழு மற்றும் விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனினும் விஜய் தரப்பே ஜனநாயகன் படத்தை லீக் செய்திருக்கக் கூடும் என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் ஒருபுறம் நடந்து வருகிறது.. அதாவது, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஜனநாயகன் படம் விஜய்க்கு மிகப்பெரிய பிரச்சாரமாக அமையும்.. மேலும் ஜனநாயகன் படம் லீக் ஆனதால் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய விஜய் மீண்டும் நடிக்க வருவார் என்று கூறப்பட்டது..

இந்த சூழலில் ஜனநாயகன் படத்தால் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய விஜய் மேலும் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.. விஜய்யின் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ், அட்லி அல்லது நெல்சன் ஆகியோரில் ஒருவர் இயக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் அடுத்ததாக ஒரு படத்தில் நடிப்பார் என்பது வெறும் வதந்தி என்று நடிகர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.. நடிகரும், விஜய்யின் நண்பரும், தூத்துக்குடி வேட்பாளருமான ஸ்ரீநாத் பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர் “ ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது வருத்தமளிக்கிறது, மத்திய அரசு தடுக்க வேண்டும். தவெக தலைவர் விஜய் அடுத்ததாக ஒரு படம் நடிப்பார் என்பது வதந்தி.. ஜனநாயகன் தான் கடைசி படம் என்று விஜய் கூறிவிட்டார்.. மக்களுக்கு உண்டான சேவை, பொதுப்பணியில் தான் விஜய் ஈடுபடப்போகிறார்..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

பீகாரில் 10 முறை முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார் பதவியை ராஜினாமா செய்தார்.. அடுத்த முதல்வர் யார்..?

Tue Apr 14 , 2026
நிதிஷ் குமார் இன்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்; இதன் மூலம், அவரது 20 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வந்தது. அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து, தற்போது நிதிஷ் குமாருக்குப் பின் யார் முதலமைச்சர் பதவியை ஏற்பார் என்பதன் மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.. நிதிஷ் குமார் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகிக்கும் ஜனதா […]
nitish

You May Like