தவெக தேர்தல் அறிக்கை 16-ம் தேதி வெளியிடப்படும்.. விஜய் அறிவிப்பு..!

vijay tvk

தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று திருப்பூரில் பரப்புரையில் ஈடுபட்டார்.. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சென்றார்.. கோவை விமான நிலையத்தில் இருந்து திருப்பூருக்கு சாலை மார்க்கமாக விஜய் சென்ற நிலையில் அவருக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்..


தொடர்ந்து திருப்பூர் மாவட்ட பெருமாநல்லூரில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் விஜய் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது பேசிய வரும் 16-ம் தேதி தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்..

தவெகவின் சில தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டார்

நெசவாளர்களின் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த இ-காமர்ஸ் தளம் உருவாக்கப்படும்..

கைத்தறி வைத்திருக்கும் நெசவாளர் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.30,000 வங்கிகளில் செலுத்தப்படும்.

நெசவாளர்கள் முதியோர்களின் ஓய்வூதியம் ரூ.3000ஆக உயர்த்தப்படும்.

நெசவாளர்களுக்கு வழங்கும் நூல், சாயம் ஆகியவை 50% மானியத்தில் வழங்கப்படும்..

நெருக்கடியில் உள்ள சிறு குறு தொழிலாளர்களை பாதுகாக்க ரூ.15,000 கோடி பண்ட் உருவாக்கப்படும்..

சிறு, குறு தொழில்கள் மூடப்படுவதற்கான காரணமான பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தை நிறுத்திவைப்போம்..

ஒப்பந்தம் அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களின் வேலை நிரந்தரமாக்கப்படும்

சிறு குறு தொழில்களை நவீனமயமாக்க யூனிட்டுக்கு 50 லட்சம் வரை நேரடி மூலதன மானியத்தை வழங்குவோம்.

காவலர்களின் அடிப்படை ஊதியம் ரூ.25,000ஆக உயர்த்தப்படும்.

காவலர்களுக்கு வாரந்தோறும் ஓய்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Subscribe to my YouTube Channel

Read More : விஜய் அடுத்ததாக ஒரு படம் நடிப்பார் என்பது வதந்தி.. விஜய் நண்பர் ஸ்ரீநாத் தகவல்..!

RUPA

Next Post

நெசவாளர் குடும்பத்திற்கு ரூ.30,000.. விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி.. விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள்..!

Tue Apr 14 , 2026
திருப்பூரில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் தவெக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கபப்டும் என்று அறிவித்தார்.. விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நெசவாளர்களின் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த இ-காமர்ஸ் தளம் உருவாக்கப்படும்.. கைத்தறி வைத்திருக்கும் நெசவாளர் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.30,000 வங்கிகளில் செலுத்தப்படும். நெசவாளர்கள் முதியோர்களின் ஓய்வூதியம் ரூ.3000ஆக உயர்த்தப்படும். நெசவாளர்களுக்கு வழங்கும் நூல், சாயம் ஆகியவை 50% மானியத்தில் வழங்கப்படும்.. […]
TVK Vijay New Campaign

You May Like