fbpx

Lok Sabha | மக்களவை தேர்தல் தேதி..!! இந்திய தேர்தல் ஆணைய வட்டாரம் முக்கிய தகவல்..!!

மக்களவை தேர்தல் அட்டவணையை மார்ச் 13ஆம் தேதிக்கு பின்னர் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய தேர்தல் குழு அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தேர்தல் ஆயத்த நிலையை ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் தற்போது, ​​தமிழ்நாட்டில் ஆய்வு செய்கின்றனர். அடுத்ததாக உத்தரப்பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் செல்லவுள்ளனர். இந்த பயணங்கள் மார்ச் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. எனவே, தேர்தல் அட்டவணை மார்ச் 13ஆம் தேதிக்கு பின்னர் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

முந்தைய 2019 மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அந்தாண்டு மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. 543 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்றன. தொடர்ந்து மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்க, சுமார் 91.2 கோடி மக்கள் தகுதி பெற்ற நிலையில், அவர்களில் 67%-க்கும் அதிகமானோர் மட்டுமே வாக்களித்தனர். தரவுகளின்படி, இந்த ஆண்டு, சுமார் 97 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் போன்ற மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

English Summary : Lok Sabha poll dates likely after March 13: Election Commission sources

Read More : செம குட் நியூஸ்..!! புத்தகத்தை பார்த்தே இனி தேர்வு எழுதலாம்..!! வருகிறது புதிய நடைமுறை..!! CBSE அதிரடி..!!

Chella

Next Post

70 வயதிலும் எழுந்து ஓட வைக்கும் அற்புத தேநீர்.! வேறு என்னென்ன நன்மைகளை தரும்.!?

Fri Feb 23 , 2024
பொதுவாக தினமும் காலையில் டீ, காபி போன்றவற்றை குடிப்பது பலருக்கும் வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு ஒரு நாளை ஆரம்பிக்கும் போது டீ அல்லது காபி குடிப்பது அன்றைய நாளுக்கு தேவையான சுறுசுறுப்பையும், ஆற்றலையும் தருகிறது. ஆனால் அளவுக்கு அதிகமான டீ, காபி போன்றவற்றை குடிப்பது உடலுக்கு நல்லதல்ல என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். எனவே உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய் வைத்து தேநீர் தயாரித்து குடிப்பதன் […]

You May Like