தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்தார்.. மேலும் ” செங்கோட்டையன் மிகவும் திமிர் பிடித்தவர்.. அதிமுகவினர் நல்ல சட்டை போட்டால் கூட செங்கோட்டையனுக்கு பிடிக்காது.. அவர் மோசமான குணம் கொண்டவர்..
செங்கோட்டையன் இருந்த வரை யாராலும் நிம்மதியாக வாழ முடியவில்லை.. மிகவும் கீழ்த்தரமாக பேசக்கூடியவர் செங்கோட்டையன்.. செங்கோட்டையன் மனைவி, மகன் தலைமை செயலகத்திற்கு வந்து ஜெயலலிதாவிடம் புகார் கொடுத்தனர்.. அது கேவலமான புகார்.. அந்த புகார் அளித்ததால் தான் ஜெயலலிதா செங்கோட்டையன் பதவியை பறித்தார்.. செங்கோட்டையன் மீதான விவகாரமான புகார் கோபிச்செட்டிப்பாளையம் மக்களுக்கு தெரியும்..
எனது அமைச்சரவையில் பதவி வேண்டும் என்று கெஞ்சி கண்ணீர் வடித்தார்.. நீங்கள் எனக்கு பதவி கொடுக்கவில்லை எனில் வேறு யார் பதவி கொடுப்பார் எண்று என்னிடம் செங்கோட்டையன் கண்ணீர் விட்டு அழுதார்.. ஒரு காலத்தில் எனக்கு நண்பராக இருந்தவர்.. ஆனால் இன்று அவர் வாய்க் கொழுப்பில் பேசி வருகிறார்..
அத்திக்கடவு – அவிநாசி திட்ட விழாவிற்கு செங்கோட்டையன் வர மறுத்துவிட்டார்.. அம்மா படம் இல்லை என்று கூறி அவர் வரவில்லை.. பொறாமை காரணமாகவே அவர் வரவில்லை.. இப்படிப்பட்ட பொறாமைக் கொண்ட நபர் நாட்டிற்கு தேவையா..? முக ஸ்டாலினை அடிக்கடி சந்தித்து பேசினார்.. திமுகவின் உளவாளி செங்கோட்டையன் என கண்டுபிடித்த பிறகு செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்..
வரவிருக்கும் தேர்தலில் நான் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.. செங்கோட்டையனால் இப்படி சவால் விட்டு சொல்ல முடியுமா?
ஓட்டுப் போட்ட மக்களுக்கே விசுவாசம் இல்லாதவர் விஜய்.. ஆனால் இப்போது சேர வேண்டிய இடத்தில் தான் சேர்ந்திருக்கிறார்.. செங்கோட்டையன் 100 நாள் சிறையில் இருந்துவிட்டு வந்தார்.. என் மீது நெடுஞ்சாலைத்துறை ஊழல் என்று வழக்குப் போட்டனர்.. ஆனால் நான் நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி நிரபராதி என்று உங்கள் முன் நிற்கிறேன்..
செங்கோட்டையைன் நாக்கு இருக்கிறது என்று பேசக்கூடாது.. அசிங்கமாக போய்விடும்.. ரோட்டில் நடக்க முடியாத அளவுக்கு ஆதாரங்களை வைத்திருக்கிறேன்.. திமுகவின் பி டீம் என்று தெரிந்த உடன் நான் உஷாராகி உங்களுக்கு எதிரான ஆதாரங்களை எடுத்து வைத்துவிட்டேன்.. செங்கோட்டையன் ஜாக்கிரதையாக பேச வேண்டும்..” என்று தெரிவித்தார்..
Read More : விஜய்யின் கடலூர் பிரச்சாரம் மீண்டும் ரத்து..! தேர்தல் நெருங்கும் நிலையில் ரத்தானதால் தவெகவினர் அதிர்ச்சி..!



