தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி, சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் மாற்றி மாற்றி பிரச்சாரங்களையும் வாக்குறுதிகளையும் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், மதுரையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த பிரகாஷ் ராஜ், குஷ்பு மற்றும் சுந்தர்.சி பற்றி பேசியது தற்போது வைரலாகி வருகின்றன.
பிரகாஷ் ராஜ் பேசுகையில், “சுந்தர்.சி நல்ல இயக்குநர். அவரை வேட்பாளராக அறிவிப்பதற்கு 3 நாட்கள் முன்னர் வரை படப்பிடிப்பில் இருந்தார். 3 நாட்களுக்கு முன்னர் வரை மதுரை மக்களுக்கோ, தமிழகத்திற்கோ, இந்திய அரசியலுக்கோ எந்த சம்பந்தமும் இல்லாம இருந்த நீங்க.. வேட்பாளராக அறிவித்த உடனே அரசியலுக்கு வந்துடுவீங்களா.. மதுரை மக்கள் என்ன ஏமார்ந்தவர்களா?
10 வருடத்தில் 3 கட்சி மாறி இப்போ ஏதோ அரசியல் பேசிட்டு இருக்காங்க உங்க மனைவி குஷ்பு. அவங்களுக்கு கிடைக்காத சீட் உங்களுக்கு எப்படி கிடைத்தது? முதலில் நீங்க எந்த கட்சி? புதிய நீதிக்கட்சி என ஒரு கட்சி இருக்கிறது. அதன் வேட்பாளராக இறங்கியிருக்கிறீர்கள். அது பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. மதுரை மக்களுக்கு பாஜகவை பற்றி தெரியும். அதனால் நேரடியா இறங்கமா திடீர்னு உங்களை வேட்பாளரா அறிவிச்சுட்டாங்க. இது யானை மாலை போட்ட கதைதான்.
இப்போ நீங்க சிறந்த இயக்குநராக இருக்கிறீங்க. காரணம், அதற்கான முயற்சி, உழைப்பு உங்க கிட்ட இருந்துச்சு. இந்த இடத்திற்கு வர எத்தனை முயன்றிருப்பீர்கள்? ஆனால் எம்எல்ஏ பதவி மட்டும் ஈஸியா கிடைச்சிடுமா? களத்துல என்ன நடந்துட்டு இருக்கு? நமக்கு என்ன தகுதி இருக்குனு யோசிக்கனும். ஆட்சி எனில் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதை மட்டும் பேசி கடந்துவிட முடியுமா? நிறைகளை பேசுவதில்லையா? இது எந்த மாதிரியான அரசியல்? என பேசினார்.
Read more: அட்சய திருதியை 2026: இன்று தங்கம் வாங்க உகந்த நேரம் எது..? ஒரு குண்டுமணியாவது வாங்குங்க!



