fbpx

’அடக்கடவுளே’..!! ’அதை யாரும் நம்பாதீங்க’..!! TVK பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பரபரப்பு அறிக்கை..!!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் விரைவில் உறுப்பினர்களை சேர்க்க செயலி உருவாக்கப்படும் என்றும், அதிக உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கே நிர்வாக பதவி வழங்கப்படும் என்று அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் ஒரு பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் @tvkvijayhq அதிகாரப்பூர்வச் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும்.

உறுப்பினர்கள் சேர்க்கைக்காகச் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று கடந்த 19ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளேன். கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : Job Vacancy | ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்..!! நல்ல சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Chella

Next Post

Baltic Sea: கடலுக்கு அடியில் ராட்சத அதிசயம்..! 11,000 ஆண்டுகள் பழமையானது..! விஞ்ஞானிகள் ஆச்சரியம்!

Sat Feb 24 , 2024
பால்டிக் கடல் ஜெர்மன் கடற்கரை பகுதியில் மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப் பழமையான கட்டமைப்பை கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். 11,000 ஆண்டுகளுக்கு முன்பு கற்கால வேட்டைக்காரர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது, இது கலைமான்களை வேட்டையாடும் பொறிமுறையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். 2021 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் அறிந்த சுவர் இதுவாகும். பால்டிக் கடல் பகுதியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப் பழமையான கட்டமைப்பாக நிரூபிக்கப்படலாம். இந்த கண்டுபிடிப்பு திங்கள்கிழமை மாலை […]

You May Like