தேவாலயத்தில் முழங்காலிட்ட படியே பிராத்தனை செய்த விஜய்..! திருச்சி ரோட் ஷோ நடுவே வேண்டுதல்..!

vijay church

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி தலைவர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.. அதன்படி விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பிரதான கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..


எனினும் விஜய் மட்டும் தனது பிரச்சாரத்தை தொடர்ந்து ரத்து செய்து வந்தார்.. விஜய் இதுவரை பெரம்பூர், திருச்சி கிழக்கு, புதுச்சேரி, திருநெல்வேலி, காரைக்குடி, கன்னியாகுமரி, திருப்பூர், சென்னை ஆகிய இடங்களில் மட்டும் தான் பரப்புரை செய்துள்ளார்.. கடலூர், தருமபுரி, திருவள்ளூர் உள்ளிட்ட பல இடங்களில் பிரச்சாரங்களை ரத்து செய்துவிட்டார்..

இந்த நிலையில் தான் போட்டியிடும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள சென்றார்.. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமானம் நிலையம் சென்ற அவர் பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக பிரச்சார வாகனத்தில் ரோடு ஷோ சென்றார்.. அவர் செல்லும் வழியில் தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் பொதுமக்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர்..

இதை தொடர்ந்து திருச்சியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் பிரார்த்தனை செய்தார்.. புனித அந்தோணியார் ஆலயத்தினுள் முழங்கால் இட்டப்படியே சென்று விஜய் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..

RUPA

Next Post

5 பேர் உடல் சிதறி பலி.. பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மற்றவர்களின் நிலை என்ன..?

Sun Apr 19 , 2026
5 people died in a massive explosion at a fireworks factory..! What is the condition of the others..?
blast 1712152099

You May Like