சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தவெக தலைவர் பங்கேற்று பேசினார்.. அப்போது பேசிய அவர் ” மக்களை கண்டு கொள்ளாத நபர்களை வீட்டுக்கு அனுப்பாமல் கோட்டைக்கா அனுப்புவார்கள்? மக்களை கண்டு கொள்ளாத ஆட்சியை, தலைவரை வீட்டுக்கு அனுப்பப்போகும் தேர்தல் இது!
தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் வாங்காத அளவுக்கு கடன் வாங்கி கடன் சுமையை உயர்த்தியது திமுக அரசு. இவ்வளவு கடன் வாங்கியதில் இளைஞர்களின் கல்விக் கடனையாவது ரத்து செய்திருக்கலாம்.
எம்மதமும் சம்மதம் என்பதே என் முகம்; மதச்சார்பற்ற கொள்கையில் இருந்து மாறப்போவதில்லை; இதில் 100% இந்த விஜய்யை நீங்கள் நம்பலாம். இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்களின் ஆளாக தான் விஜய் இருப்பான்.. இந்த விஜய் ஒன்று சொன்னால் அதிலிருந்து மாறமாட்டான்.. இந்த விஜய் ஸ்டாலின் சார் மாதிரி கிடையாது..
திமுகவுக்கும் பாஜகவுக்கும் ஒரு அண்டர்கிரவுண்ட டீலிங் இருக்கிறது.. நான் இரண்டு வருடங்களுக்கு இதை சொன்னேன்.. இப்போது மேற்கு வங்க முதல்வர் அதை தான் சொல்லி இருக்கீறார்.. இதற்கு என்ன பதில் சொல்லப்போறீங்க ஸ்டாலின் சார்..?
இந்த தேர்தலில் திமுக தோற்கப் போவது உறுதி.. தேர்தல் முடிவுக்கு பின், கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும், வழக்குகளில் இருந்து தப்பித்து கொள்வதற்காகவும், மோடி, அமித்ஷா காலில் திமுக விழுகிறதா? என்று பாருங்கள்.. திமுகவின் சிறுபான்மை சாயம் அதில் வெளுக்கப் போகிறது..
பாஜகவின் முதல் அடிமை யார் என்று திமுகவுக்கு மற்றும் பலருக்கும் போட்டி நிலவுகிறது.. சிறுபான்மை சகோதர்களுடன் இந்த நிற்பான்.. அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது..” என்று தெரிவித்தார்..



