பொதுவாக பலரது வீட்டின் சுவர்களில் சாதாரணமாக பல்லியை பார்க்கலாம். கிராமப்புறங்களில் பல்லி கத்துவதை கவுளி அடிக்கிறது நல்ல சகுனம் தான் என்று கூறுவது வழக்கம். பல்லி வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து கத்தினால் நல்ல சகுனம் என்றும், எந்த ஒரு நல்ல விஷயத்தையும் ஆரம்பிக்கலாம் என்றும் கிராமபுறத்தில் பெரியவர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம்.
மேலும் பல்லி நம் உடலில் விழுந்து விட்டால் அதற்கேற்றார் போல பலன்கள் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக பல்லி நெற்றியில் விழுந்தால் அதிர்ஷ்டம் ஏற்படும், புருவ மத்தியில் விழுந்தால் லட்சுமி கடாட்சம், வலது கண்ணில் விழுந்தால் நல்ல பெயர், வலது புருவத்தில் விழுந்தால் அரசாங்க வேலை, வலது காதில் விழுந்தால் நீண்ட ஆயுள், இடது காதில் விழுந்தால் தொழில் வளர்ச்சி, மார்பு பகுதியில் விழுந்தால் பொருள் வரவு, கணுக்கால் பகுதியில் விழுந்தால் பயணம் உண்டாகும், நாடியில் விழுந்தால் ஆபரணங்கள் வாங்கும் யோகம் என ஒவ்வொரு உறுப்பிற்க்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளன.
இவ்வாறு நமக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் பல்லி நம் உடலில் ஒரு சில உறுப்புகளில் விழுந்து விட்ட பிறகு கஷ்டங்களை சந்தித்து மன சஞ்சலத்துடன் இருந்தால், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சென்று அங்குள்ள தங்க நிற பல்லிக்கு பரிகாரம் செய்து வந்தால் பிரச்சனை நீங்கும் என்று நம்பப்பட்டு வருகிறது.
குறிப்பாக சீன மக்கள் பல்லியை அதிர்ஷ்டத்தை தரும் உயிரினமாக கருதி வருவதால் இதை வணங்கி வருகின்றனர். மேலும் பல்லிக்கு தீய சக்தியை கண்டறியும் அற்புத குணம் இருப்பதால் வீட்டில் பல்லி இருப்பது மிகவும் நல்லது என்று ஆராய்ச்சியாளர்களும், ஜோதிட வல்லுநர்களும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.