தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமாக 5 கோடியே 73 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும்..
இந்த சூழலில் இன்று காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்..
தமிழ்நாட்டில் 4 மணி நேரத்தில் 37.56% வாக்குகள் பதிவாகி உள்ளன.. அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 42.45% வாக்குகள் பதிவாகி உள்ளது.. தமிழ்நாட்டில் குறைந்த பட்சமாக ராமநாதபுரத்தில் 34.02% வாக்குகள் பதிவாகி உள்ளது..
அரியலூர் : 36.11%
செங்கல்பட்டு : 37.17%
சென்னை : 35.47%
கோவை : 38.62%
கடலூர் : 36.30%
தருமபுரி : 38.28
திருப்பூர் : 42.45%
நாமக்கல் : 41.41%
ஈரோடு : 41.00%
சேலம் : 40.56%
கரூர் : 39.70%
நீலகிரி : 32.62%
ராமநாதபுரம் : 34.02%
திருநெல்வேலி : 34.05%
கன்னியாகுமரி : 32.16%
குமாரபாளையம் : 45.87%
திருப்பூர் தெற்கு : 44.21%
அவிநாசி : 43.95%
பல்லடம் : 43.76%
காங்கேயம் : 43.65%



