நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான சூழலை அடைந்துள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை வார இறுதி, தொடக்கத்தில் வைக்காமல் புதன்கிழமை வாக்கில் நடத்த அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் அரசு விடுமுறை, உள்ளூர் விழா, பண்டிகை விவரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மார்ச் முதல் வாரத்தில் 200 கம்பெனி துணை ராணுவத்தினர் தமிழ்நாடு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Read More : Annamalai | ’அடுத்த 100 நாளில் தரமான சம்பவம்’..!! ’நான் உறுதியாக கூறுகிறேன்’..!! அண்ணாமலை அதிரடி..!!