2 பேர் உடல் சிதறி பலி.. பட்டாசு ஆலை விபத்து.. தேனியில் சோகம்..!

crackers accident

தேனி மாவட்டம் கம்பம் நகரில் காட்டுப்பள்ளி வாசல் தெருவில் லட்சு என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.. திருப்பதி என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலை தேர்தல் விடுமுறை காரணமாக 2 நாட்கள் மூடியிருந்ததாக கூறப்படுகிறது..


இந்த நிலையில் 2 நாட்களுக்கு பின் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட அய்யப்பன், நாகார்ஜுன், சூர்யா, தினேஷ் என்ற தீனா ஆகிய 4 பேரும் வழக்கம் போல் தொழிற்சாலைக்கு பணிக்கு வந்தனர்..

இரண்டு நாட்களுக்கு பிறகு பட்டாசு தயாரிக்கும் ஈடுபட வந்த தினேஷும் சூர்யாவும் மூலப்பொருட்கள் வைத்த அறையை திறந்துள்ளனர்.. அப்போது எதிர்பாராத விதமாக அந்த அறையில் விபத்து ஏற்பட்டு, சூர்யாவும் தினேஷும் உடல் சிதறி உயிரிழந்தனர்..

வெடி சத்தம் கேட்டதை தொடர்ந்து மற்ற இருவரும் வெளியே அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்துள்ளனர்.. இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. இதை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் உடல் சிதறி கிடந்த இறந்தவர்களின் உடற்பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

தகவல் அறிந்த உடன் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.. மேலும் வெடி விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

கம்பம் நகரில் பட்டாசு ஆலை இல்லாத நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் பட்டாசு ஆலை புதிதாக திறக்கப்பட்டுள்ளது.. இந்த ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Read More : கேஸ் முன்பதிவு முதல் மின்சாரக் கட்டணங்கள் வரை..! இவ்வாறு செலுத்தி, மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வரை சேமிக்கலாம்..!

RUPA

Next Post

கொளுத்தும் வெயிலில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் ஜூஸ்..! இதை தினமும் குடித்தால் போதும்..!

Sat Apr 25 , 2026
நாம் நமது அன்றாட உணவில் வெள்ளரிக்காயை பெரும்பாலும் சாலட் வடிவில் உட்கொள்கிறோம். அதன் சுவைக்காக மட்டுமல்லாமல், அதில் மறைந்திருக்கும் அளவற்ற ஆரோக்கிய நன்மைகளுக்காகவும், இது ஒரு சக்திவாய்ந்த காய்கறியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வெள்ளரிக்காயை பச்சையாக சாப்பிடுவது நமது உடலுக்கு பல ஊட்டச்சத்துக்களை வழங்கி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அதன் மருத்துவ குணங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. பொதுவாக, வெள்ளரிக்காய் ஆண்டு முழுவதும் கிடைக்கும்.. மேலும் மலிவு […]
cucumber juice 1

You May Like