பொதுவாக நம் உடல் சீராக இயங்குவதற்கு தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது. பிறந்த குழந்தைகளுக்கு 14 முதல் 17 மணிநேர தூக்கம் மிகவும் முக்கியம். பெரியவர்களுக்கு 7 முதல் 8 மணிநேர தூக்கம் மிகவும் முக்கியமானது. போதுமான நேரம் இரவு தூங்கவில்லை என்றால் உடலில் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் அதிக நேரம் தூங்குவதால் உடலில் பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து தெரியுமா? ஆம் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்குபவர்களுக்கு உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இது குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?
1. நீண்ட நேரம் தூங்குவதால் உடலில் அசைவு இல்லாமல் தசைகள் செயலிழந்து போகும் வாய்ப்புகள் உண்டு.
2. நாம் விழிப்பில் இருக்கும்போது நம் உறுப்புகளின் செயல்பாடும், தூங்கும் போது நம் உறுப்புகளின் செயல்பாடும் வேறுபடும். எனவே அதிக நேரம் தூங்குவதால் நம் உடல் உறுப்புகள் சோர்வடைய துவங்கும்.
3. அதிக நேரம் தூங்குவதால் மூளையில் நரம்புகள் குழப்பமடைந்து சோர்வு, நினைவாற்றல் குறைவு, உடல் வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
4. நாம் முழித்திருக்கும் போது உடலில் செரோடனின் என்ற வேதிப்பொருள் உருவாகும். இது தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் என்பதால் அதிக நேரம் தூங்கும் போது இந்த வேதிப்பொருள் நம் உடலில் உருவாகுவது குறையும்.
5. குறிப்பாக மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு தனிமையை அதிகமாக உணரச் செய்யும்.
6. உடல் எடை அதிகரித்து சர்க்கரை நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.