மத்திய அரசின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிஎம் கிசான் திட்டமானது நாடு முழுவதும் இந்திய அரசின் நிதி உதவியில் செயல்படுத்தப்படுகிறது. 2018ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, உலகிலேயே மிகப்பெரிய நேரடி பயன் பரிமாற்றங்களில் (DBT) ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் தங்களது விவசாயத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உதவியாக இந்த தொகை தரப்படுகிறது.
பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த வியசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 என நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை 15 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 16-வது தவணைப் பணம் ரூ.2,000 நாளை (பிப்.28) வழங்கப்படுகிறது. மேலும், ஜனவரி 31ஆம் தேதிக்குள் E-KYC முடிக்காதவர்களுக்கு இந்த முறை பணம் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28-ம் தேதி புதன்கிழமை பிஎம் கிசான் திட்டத்தின் 16-வது தவணைத் தொகையை பிரதமர் மோடி மகராஷ்ட்ரா மாநிலம் யவாத்மால் மாவட்டத்திலிருந்து வெளியிடுவார் என PM-KISAN-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary : PM Kisan Beneficiary Status List 2024, ₹2000 16 Kist Payment Date Announced