கோடைக்காலம் தொடங்கியவுடன், நம் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் செயல்திறன் மிகவும் முக்கியமானதாகிறது. இருப்பினும், சமீபகாலமாக ஃப்ரிட்ஜ் சிலிண்டர்களைப் போல வெடிப்பதாக செய்திகளைக் கேட்டு வருகிறோம். இதற்கு முக்கிய காரணம், குளிர்சாதனப் பெட்டியை சரியான இடத்தில் வைக்காமல் இருப்பதும், அதை அதிகமாகப் பயன்படுத்துவதும் ஆகும். குளிர்சாதனப் பெட்டியின் பின்புறத்தில் உள்ள கம்ப்ரசர் சூடாகும் போது, அதற்குப் போதுமான காற்று கிடைக்கவில்லை என்றால், அது வெடிக்கக்கூடும்.
முக்கிய முன்னெச்சரிக்கைகள்:
சரியான தூரம்:
ஃப்ரிட்ஜ்-ஐ சுவரோடு ஒட்டி வைக்கக்கூடாது. சுவருக்கும் ஃப்ரிட்ஜ்-க்கும் இடையில் குறைந்தபட்சம் 6 அங்குல இடைவெளி இருக்க வேண்டும். இது காற்று சுழற்சிக்கு வழிவகுத்து, கம்ப்ரசரைக் குளிர்விக்கிறது.
அளவுக்கு அதிகமாக நிரப்ப வேண்டாம்:
ஃப்ரிட்ஜில் பொருட்களை அளவுக்கு அதிகமாக நிரப்ப வேண்டாம். காற்று சுழற்சிக்கு போதுமான இடம் இருக்கும்போது மட்டுமே, குளிர்வித்தல் சீராக நடைபெறும். இல்லையெனில், குளிர்வித்தல் குறைந்து, உணவு கெட்டுவிடும்.
இடி மற்றும் மின்னலின் போது:
மழை அல்லது இடியின் போது, மின்சார ஏற்றத்தாழ்வுகளால் பலகைகள் எரிந்துபோகும் அபாயம் உள்ளது. இதுபோன்ற சமயங்களில், ஃப்ரிட்ஜ்-யை அணைத்துவிட்டு, மின் இணைப்பைத் துண்டிப்பதே பாதுகாப்பானது.
பனிக்கட்டியை அகற்றும்போது கவனிக்க வேண்டியவை:
ஃபிரீசரில் உள்ள பனிக்கட்டி மிகவும் தடிமனாக இருக்கும்போது, அதை கத்தி அல்லது ஸ்க்ரூடிரைவரால் குத்த வேண்டாம். இது எரிவாயுக் குழாய்களில் கசிவை ஏற்படுத்தி, குளிர்சாதனப் பெட்டியைச் சேதப்படுத்தக்கூடும். டிஃப்ராஸ்ட் பட்டனை அழுத்தி, பனிக்கட்டி உருகும் வரை காத்திருக்கவும்.
எவற்றை வைக்கக்கூடாது?:
ஊறுகாய் மற்றும் புளி போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கத் தேவையில்லை. இவை குளிர்சாதனப் பெட்டியில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இடத்தையும் வீணடிக்கின்றன.
Read More : Summer Tips: கோடைக்காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் இவைதான்..! மருத்துவர் வார்னிங்..



